கொழுப்பை சட்டென்று கரைக்கும் கிரீன் டீ! 2 நிமிடத்தில் தயாரிக்கலாம்...எப்படி தெரியுமா?

 இளைஞர்களை பாடாய்படுத்தி எடுக்கும் தொல்லை கொலஸ்ட்ரால் தான்.

தேவையற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் இந்த மோசமான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

கொழுப்பு அதிகமாகி கொண்டே போனால், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் என அடுத்தடுத்த ஆபத்துக்களும் எமக்கு வரிசையாக காத்திருக்கின்றது. இந்த தொல்லையில் இருந்து விடுபட நாம் கிரீன் டீ குடிக்கலாம்.


ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ள கிரீன் டீயை தினமும் ஒரே ஒரு கப் குடித்து வந்தாலே உடலில் கொலெஸ்ட்ரால்கள் சேராது.

குறிப்பாக இதய நோய்களை தர கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலுமாக இது கரைத்து விடும்.

இத்தகைய அற்புத பானத்தை நொடியில் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.



கிரீன் டீ தயாரிக்க தேவையான பொருட்கள்

தண்ணீர் - 1டம்ளர்
 கிரீன் டீ இலை -   1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 சொட்டு
சர்க்கரை, தேன் - விரும்பினால்

கிரீன் டீ தயாரிப்பு

தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில், ஒரு தேக்கரண்டி கிரீன் டீ இலைகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் மூடிவைக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, கிரீன் டீயின் சாறு வெந்நீரில் இறங்கியிருக்கும்.

அதை வடிகட்டி, ஓரிரு சொட்டுகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து, சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.

சர்க்கரை, தேன் முதலானவற்றைத் தவிர்த்தால் முழு பலனையும் பெறலாம்.  கசப்பாக இருக்கிறது என்பவர்கள் மிகச் சிறிய அளவு தேன் அல்லது சக்கரை சேர்த்துக்கொள்ளலாம். 



முக்கிய குறிப்பு

உணவு கட்டுப்பாடு பயத்தில் சர்க்கரை நோயாளிகள் கிரீன் டீ பருகுவதை தடுக்க வேண்டாம்.

எடை குறைக்கும் முயற்சியில் உள்ள சர்க்கரை நோயாளிகளின் சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க கிரீன் டீ உதவும்.


நாம் சாப்பிடும் உணவு குளுக்கோஸாக மாறி, ரத்தத்தில் கலக்கும். ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும். எனவே எடை குறைக்க ஆர்வம் உள்ள சுகர் நோயாளிகளும் தினமும் 1 கிரீன் டீ குடிக்கலாம்.








Comments