Skin Care: கிளிசரின் செய்யும் அழகிய மாயம்! மாயத்தில் கட்டுண்டால் சருமம் பொலிவாகும்...
GLYCERINE BENEFITS FOR SKIN: கிளிசரின் என்பது நிறமற்ற, மணமற்ற, இனிப்பு சுவை திரவம் ஆகும். அடர்த்தியான பிசுபிசுப்பான நிலைத்தன்மையுடன் இருக்கும் கிளிசரின், கிளிசரால் என்றும் அழைக்கப்படுகிறது. சோப்பு தயாரிக்கும் போது சேர்க்கப்படும் இது, அழகு சாதனப் பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது...
- கிளிசரின் பல அழகுசாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது
- நிறமற்ற மணமற்ற, இனிப்பு சுவை திரவம் கிளிசரின்
- பிசுபிசுப்பான கிளிசரின், கிளிசரால் என்றும் அழைக்கப்படுகிறது
கிளிசரின் என்பது நிறமற்ற, மணமற்ற, இனிப்பு சுவை திரவம் ஆகும். தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, பின்னர் சர்க்கரையுடன் சேர்த்து புளிக்கவைக்கப்பட்டு, செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது கிளிசரின். கிளிசரினுக்கு நிறம் கிடையாது. இதில் எந்தவித வாசனையும் இல்லை. கிளிசரின் ஒரு மாய்ஸ்சரைசர், க்ளென்சர் ஆகும். இதை சீரம், மாய்ஸ்சரைசர், க்ளென்சர் போன்றவற்றைத் தயாரிக்கும் போதும் பயனபடுத்துகின்றனர்.
அடர்த்தியான பிசுபிசுப்பான நிலைத்தன்மையுடன் இருக்கும் கிளிசரின், கிளிசரால் என்றும் அழைக்கப்படுகிறது. சோப்பு தயாரிக்கும் போது சேர்க்கப்படும் இது, அழகு சாதனப் பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு எண்ணெய் பசை சருமம், உணர்திறன் வாய்ந்த சருமம் அல்லது வறண்ட சருமம் என இருந்தாலும், சரும பராமரிப்பில் கிளிசரின் உதவியாக உள்ளது. இயற்கையான, சுத்தமான கிளிசரின், தீங்கு விளைவிக்காது.
தோல் பராமரிப்புக்காக இயற்கையான கிளிசரினை எப்படி பயன்படுத்தலாம் என்றும், சருமத்திற்கு கிளிசரின் நன்மைகள் என்னவென்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
சருமத்தை இளமையாக வைத்திருக்கும்
சருமத்தில் கிளிசரின் தடவினால், சருமத்தில் ஈரப்பதம் தேங்கி, இளமையான, ஆரோக்கியமான தோற்றம் கிடைக்கும். சருமத்தின் மேல் அடுக்குக்கு ஈரப்பதத்தை வரவழைப்பதன் மூலம், கிளிசரின் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது கிளிசரின்
முகப்பருவை குறைக்கிறது
முகப்பருக்களுக்கான க்ளென்சர்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களில் பொதுவாகக் காணப்படும் சில பொருட்கள் உண்மையில் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை. இருப்பினும், கிளிசரின், பக்க விளைவுகள் இல்லாமல் உங்கள் சருமத்தை அழகுபடுத்தப் பயன்படுகிறது. கிளிசரின் எண்ணெய் இல்லாதது மற்றும் சருமத்தின் துளைகளை அடைக்காது. அடைபட்ட துளைகளையும் திறக்கும் பண்பு கொண்டது. எனவே எண்ணெய் சருமத்திற்கு கிளிசரின் சரியான தீர்வாக இருக்கலாம்.
பாதுகாப்பானது
தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது, பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். சருமம், நமது உடலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, உடல் வெப்பநிலையை சீராக்குகிறது.
சில வாசனை திரவியங்கள் மற்றும் இரசாயனங்கள் சருமத்தை உலர்த்தலாம், துளைகளை அடைக்கலாம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால், உணவு மற்றும் மருந்து நி ர்வாகத்தின் (FDA) படி, கிளிசரின் பொதுவாக பாதுகாப்பானது. எனவே கவலையில்லாமல் இதை பயன்படுத்தலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் கிளிசரின் தடவ வேண்டும் என்றால் முதலில் முகத்தை சுத்தம் செய்து உலர வைக்கவும். இதற்குப் பிறகு, அரை கப் தண்ணீரில் சில துளிகள் கிளிசரின் சேர்க்கவும். இப்போது ஒரு பருத்தி உருண்டையை அதில் நனைத்து தோலில் தடவவும். வாய் அல்லது கண்களுக்கு அருகில் இதைப் பயன்படுத்த வேண்டாம்.
ALSO READ : வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்...

Comments
Post a Comment