வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்...
Vitamin E Facts: ஆரோக்கியத்தை அளிக்கும் விட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால் சோர்வு பலவீனம் ஏற்படும்... வைட்டமின் ஈ குறைபாட்டைப் போக்கும் உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்
- ஆரோக்கியத்தை அளிக்கும் விட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால் சோர்வு பலவீனம் ஏற்படும்... வைட்டமின் ஈ குறைபாட்டைப் போக்கும் உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்
ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான சத்து. ஆகும். இந்த வைட்டமின் குறைபாடு சோர்வு, பலவீனம் என தினசரி வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், வைட்டமின் ஈ குறைபாட்டைப் போக்கும் உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். ஆரோக்கியமாக இருப்பதற்கு இரும்பு, கால்சியம், புரதம் தேவைப்படுவது போலவே, வைட்டமின் ஈயும் மிகவும் அவசியம். இந்த விட்டமின் குறைந்துபோனால், உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். வைட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும்.
இது மனித உடலால் பயன்படுத்தப்படும் ஆல்பா-டோகோபெரோல் ஆகிய வைட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால், முடி, தோல், மார்பகம், எலும்புகள் உட்பட உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும். கல்லீரலில் பிரச்சனையையும் அதிகரிக்கும் இந்த வைட்டமின் செறிந்த உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் ஈ குறைபாடு
வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் இதய தமனிகளில் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது.
எவ்வளவு வைட்டமின் ஈ எடுத்துக்கொள்ள வேண்டும்?
உடலில் வைட்டமின் ஈ சத்து குறைவதால், தசை பலவீனம், நடப்பதில் சிரமம், கை, கால் மரத்துப்போதல், பார்வை தொடர்பான பிரச்னைகள் போன்றவை ஏற்படும். இதனுடன் மார்பகம் தொடர்பான பிரச்சனையும் ஏற்படலாம். பெண்கள் வைட்டமின் ஈ எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் 15 மி.கி வைட்டமின் ஈ தேவைப்படுகிறது.
தசைகள் பலவீனம், சோர்வு
வைட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால், தசைகள் பலவீனமாகலாம். நடக்க சிரமப்படும் நிலை உருவாவது, கைகளும் கால்களும் மரத்துப் போவது மற்றும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது என, தினசரி வாழ்க்கையை பாதிக்கும் பல பாதிப்புகள் ஏற்படும்.
தோல் பிரச்சனைகள்
வைட்டமின் ஈ குறைபாட்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. வைட்டமின் ஈ குறைபாட்டால் சருமம் சேதமடையாமல் தடுக்க, பாதாம் மற்றும் வேர்க்கடலையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலை சாப்பிடுவது விட்டமின் ஈ சத்து குறைபாட்டைத் தவிர்க்கச் செய்யும். ஒரு நாளைக்கு 5-7 பாதாம் பருப்புகள் மற்றும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை செய்யும் மாயம், உங்கள் ஆரோக்கியத்தில் எதிரொல்லிகும்.
குடைமிளகாய் மற்றும் கீரைகள்
குடை மிளகாய் மற்றும் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது என்பதுடன் வைட்டமின் ஈ சத்தும் அதிகம் உள்ளது. இவை செரிமானத்திற்கு உதவுபவை. கீரையில் வைட்டமின்-ஈ நிறைந்துள்ளது, இது உங்களுக்கு சரியான ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.


Comments
Post a Comment