சப்பாத்திக்கு சுவையான மூக்கடலை குருமா செய்ய தெரியுமா..? நொடியில் செய்ய ரெசிபி...

 இந்த ரெசிபியை பின்பற்றி சமையுங்கள். வீட்டில் இருப்போரை ருசியால் அசத்துங்கள்.


இரவு உணவிற்கு சைட் டிஷ் என்ன சமைப்பது என யோசனையாக இருந்தால் உடனே மூக்கடலையை ஊற வையுங்கள். இந்த ரெசிபியை பின்பற்றி சமையுங்கள். வீட்டில் இருப்போரை ருசியால் அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்

வெள்ளை மூக்கடலை - 1/2 கப்

வெங்காயம் - 1

தனியா பொடி - 1/2 tsp

கரம் மசாலா - 1/2 tsp

சீரகப் பொடி - 1/2 tsp

மஞ்சள் பொடி - 1/2 tsp

கடுகு - 1/2 tsp

கருவேப்பிலை -சிறிது

எண்ணெய் - 2 tsp


செய்முறை

இரவு முழுவதும் மூக்கடலையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

ஊற வைத்த மூக்கடலையை தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு 1 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். குழையக் கூடாது

கடாயை தீயில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்க விடவும்.

அடுத்ததாக வெங்காயம் சேர்த்து அதோடு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அதோடு தனியா பொடி, சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து வதக்கவும்.

பொடிகளின் பச்சை வாசனை போனதும், வேக வைத்த மூக்கடலையைச் சேர்க்கவும். குக்கரில் வேக வைத்த நீர் இருந்தாலும் அதையும் சேர்த்து ஊற்ற வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

சுவையான மூக்கடலை குருமா ரெடி. இது சப்பாத்தி , இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.





Comments

Popular posts from this blog

வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக.....

கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள் ....

வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!