மஸ்காரா போடுவதில் இவ்வளவு சிக்கல் இருக்கா? பாதுகாப்புக்கு இதுதான் டிப்ஸ்!

 உங்களது கண்களை அழகாகக் காட்டுவதற்கும் மற்றும் ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்கும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அழகுக்கலை நிபுணரான ஷானாஸ் ஹுசைன்.


நம்முடைய முகத்தை மேலும் அழகாக்கக் காட்டும் கண் இமைகள் பெரிதாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்றால், குறைந்த அளவில் மஸ்காரா பயன்படுத்துவதோடு இதனை அகற்றுவதற்கு காட்டன் மற்றும் கிரிசரின் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் அழகுக்கலை நிபுணர் ஷானாஸ் ஹுசைன்.

பெண்களின் முகத்தில் கூடுதல் அழகு சேர்ப்பது அவர்களது கண்கள் தான். இதனால் தான் முகத்தை எந்தளவிற்கு பராமரிக்கிறார்களோ? அதற்கேற்றால் போல் கண்களையும் அழகாக்க முயல்கிறார்கள். கண்களுக்கு மை இடுவது போன்றவற்றை முந்தைய காலத்தில் இருந்தே பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்றைக்கு புருவம், கண்களுக்குள் மை இடுவது போல், கண் இமைகளை அழகாக்க காட்ட வேண்டும் என்பதற்காக அதற்கும் மஸ்காரா போடும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்துவிட்டது.

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் கண் இமைகள் நீண்டதாக இருக்காது. அப்படி இருந்தால் பெண்களுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கும். இந்தக் குறையைப் போக்கும் வகையில் தான், தற்போது பல பெண்கள் மஸ்காரா போட்டுக்கொள்வதோடு, சந்தைகளில் விற்பனையாகும் செயற்கை கண் இமைகள் போன்ற ப்யூட்டி பொருள்களை வாங்கி உபயோக்கிறார்கள். எனவே இந்நேரத்தில் உங்களது கண்களை அழகாகக் காட்டுவதற்கும் மற்றும் ஆரோக்கியமாகப் பராமரிப்பதற்கும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அழகுக்கலை நிபுணரான ஷானாஸ் ஹுசைன்.

கண் இமைகளுக்கு அழகு சேர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

கண் இமைகளை அழகாகக் காட்டுவதற்கு மஸ்காரா உபயோகிக்கும் பெண்கள், எப்போதும் மஸ்காராவைப் போடும் போது மேல்நோக்கி பார்த்தப்படி மஸ்காரா தீட்டுவதற்கான குச்சியை கண் இமைக்கு நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும். பின்னர் கண்களை சிமிட்டாமல் இமை முடிகளுக்கு மஸ்காராவைத் தடவி கொண்டு சுமார் 30 வினாடிகள் உலர வைக்க வேண்டும். குறிப்பாக கண்களுக்கு மஸ்காரா போடும் சமயத்தில், தண்ணீர், எண்ணெய் போன்ற பொருள்களை தொடக்கூடாது.

நீங்கள் தூங்க செல்வதற்கு முன்னர் மஸ்காரா பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை ஏதாவது நிகழ்விற்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினாலும், மற்ற ஒப்பனைகளோடு சேர்ந்து மஸ்காராவையும் முழுவதுமாக நீக்கிய பின்பே தூங்க வேண்டும். கண்களின் மேக்கப்பை மெதுவாக அகற்ற, க்ளென்சிங் ஜெல் மற்றும் காட்டன் துணிகளைப் பயன்படுத்த வேண்டும். பின்னர் உங்களது ஆள்காட்டி விரலில் வைத்து கண்களை நன்றாக தேய்த்தெடுக்க வேண்டும். இல்லாவிடில் கண்களில் ஒவ்வாமை, இமைகளில் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.


இதோடு நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள்கள் தரமானவையா? என்பதை உறுதி செய்த பிறகே நீங்கள் பயன்படுத்த வேண்டும். ரோல்- ஆன் மஸ்காராவையும் பயன்டுத்த வேண்டும். மேலும் உங்கள் ரோல்-ஆன் மஸ்காராவை 3 முதல் 4 மாதங்களுக்குப் பிறகு கண்டிப்பாக 6 மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். அதிகளவில் மஸ்காராப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களது கண்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள நேரிடும்.

இன்றைக்கு பெண்கள் பலர், கண்களைக் கவர்ச்சியாக காட்ட வேண்டும் என்பதற்காக, செயற்கையாக பயன்படுத்தப்படும் கண் இமைகளைப் பயன்படுத்தும் போது பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணரிடம் அறிவுரைப் பெற்ற பின்னதாக உபயோகிக்க வேண்டும்.

கண் இமைகளை இயற்கையாக வளர்க்கும் முறை:

செயற்கையான முறையில் கண் இமைகளை அழகாக்க முயற்சிக்கும் நாம், இயற்கையான முறைகளில் கண் இமைகளை வளர்க்க முயற்சிக்க வேண்டும். இதற்கு சிறந்த வழி தான் ஆமணக்கு எண்ணெய் உபயோகிப்பது. பொதுவாக ஆமணக்கு எண்ணெய்க்கு இயற்கையாகவே முடிகளின் வளர்ச்சியை தூண்டக்கூடிய சக்தி உள்ளது. இதில் ரிகினோலிக் என்ற அமிலம் உள்ளதால் கண் இமை முடிகளை உதிர்ந்து விடாமல் தடுப்பதோடு, கண்கள் வறண்டு போவதையும் தடுக்கிறது.


இதுப்போன்று தொடர்ச்சியாக நீங்கள் பயன்படுத்தி வரும் போது, இயற்கையாகவே கண் இமைகள் நீளமாக வந்து உங்களை அழகாக்கக்கூடும். மேலும் ஆமணக்கு எண்ணெய் போன்று, ஷிவா வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் நீங்கள் உபயோகிக்கலாம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.



Comments