இந்த புகைப்படத்தில் இருப்பது எறும்பின் முகம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

 2022 Nikon Small World Photomicrography | இந்த போட்டி நாம் சாதாரண கண்களால் பார்க்க இயலாதவற்றை புகைப்படம் எடுப்பவர்களில் தேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.


சுறுசுறுப்பு என்று சொன்னாலே அதற்கு உதாரணமாக நாம் எறும்பை தான் சொல்லுவோம். நம் வீடுகளில் எறும்புகள் இரைக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதை பார்த்திருப்போம். உருவத்தில் சிறியதாக இருக்கும் இந்த எறும்புகள் நம் மீது ஏறினால் அதை தட்டி விட்டு நசுக்கி விடுவோம். இந்த எறும்புகள் குறித்து நாம் பெரிய அளவில் கவனம் செலுத்தி இருக்க மாட்டோம். ஆனால் எறும்பின் முகத்தை மிக அருகில் எடுத்த புகைப்படம் வெளியாகி பலரை பீதியாக்கி உள்ளது.

கோர பற்கள் மற்றும் ஆக்ரேஷாமான தோற்றத்துடன் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்தாலே இனி எறும்பு பக்கத்தில் கூட நாம் போக மாட்டோம். இந்த போட்டோவை லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் என்ற புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்காக 2022 Nikon Small World Photomicrography போட்டியில் பரிசையும் வென்றிருக்கிறார்.

இந்த போட்டி நாம் சாதாரண கண்களால் பார்க்க இயலாதவற்றை புகைப்படம் எடுப்பவர்களில் தேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் உலகம் எங்கும் உள்ள புகைப்பட கலைஞர்ள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் இறுதியாக 57 புகைப்பட கலைஞர்கள் எடுத்த புகைப்படம் தேர்வாகி இருந்தது. இதில் யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் மைக்ரோஸ்கோப்பில் எடுத்த புகைப்படம் பரிசை வென்றுள்ளது.

இந்த புகைப்படம் pubity என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்ச கணக்கில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது. எறும்பு முகத்தின் பற்கள், கண்கள் மற்றும் அதன் தோற்றம் பார்ப்பதற்கு அரக்கன் போன்றே வடிவத்திலேயே உள்ளது.


ALSO READ : கண்களை உருட்டி வெளியே கொண்டு வருவதில் சாதனை! வைரலாகும் வீடியோ....


Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....