கண்களை உருட்டி வெளியே கொண்டு வருவதில் சாதனை! வைரலாகும் வீடியோ....

 கண்களை உருட்டி வெளியே கொண்டு வருவதில் சாதனை படைத்த நபரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கின்னஸ் சாதனை

பிரேசிலை சேர்ந்த Tio Chico என்பவர், தனது கண்களை அதிகபட்சமாக வெளிக்கொண்டு வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவர் மிக சாதாரணமாக 20 முதல் 30 வினாடிகள் வரை, சுமார் 18 புள்ளி 2 மில்லிமீட்டர் தூரம் கண்களை வெளியே கொண்டு வந்து காண்போரை மிரட்டும் வகையில் முக பாவனையை மாற்றிக் காட்டுகிறார்.

இவரின் இந்த வேடிக்கையான செயலை கின்னஸ் புத்தகம் தற்போது சாதனையாக அங்கீகரித்துள்ளது. தொடர்ந்து வீடியோவை பார்வையிட்ட இணையவாசிகள் இவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.     

Comments