காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

 காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே உடலில் பாதி பிரச்னைகள் சரியாகி விடும் என கூறப்படுகின்றது.

குறிப்பாக அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும்.

அதுமட்டுமின்றி இது பல நன்மைகளை வழங்குகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம். 

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் முதலில் வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. குடல் சுத்தமாகிறது. இதனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மலம் கழிக்க முடிகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு உடலில் உள்ள கழிவுகளை தினமும் வெளியேற்ற வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடல் எடை குறையும். உணவு செரிமானத்தைத் தூண்டும்.

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் எழுந்தவுடனும், மற்ற நேரங்களிலும் அதிக தண்ணீர் குடிப்பது அவசியம்.   இதனால், எந்தவொரு வேலையையும் எளிதாக செய்ய முடியும். மேலும், உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால், ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதாலும் முகமும் பொலிவு பெறும்.

அதிகபட்சமாக உடல் எடை கொண்டவர்கள், அதிகமாக வியர்வையை வெளியேற்றுபவர்கள் காலையில் மட்டுமே அதிகபட்சமாக 1 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். தண்ணீருடன் சிறிது எலுமிச்சைச் சாறு, இஞ்சிச்சாறு சேர்த்தும் குடிக்கலாம்.

சாதாரணமானவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் அல்லது 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். அதற்கும் குறைவாக தண்ணீர் குடித்தால் உடல் சோர்வில் இருந்து சிறுநீரகம் வரை பல தொந்தரவுகள் ஏற்படும்.  


ALSO READ : தேனுடன் வாழை சேர்ந்தால் தித்திக்கும் அழகு! இது உலக அழகியாக ஆரோக்கிய டிப்ஸ்....

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....