தேனுடன் வாழை சேர்ந்தால் தித்திக்கும் அழகு! இது உலக அழகியாக ஆரோக்கிய டிப்ஸ்....

 Banana + Honey Combo: தேன் மற்றும் வாழைப்பழத்தின் நன்மைகள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், இவை இரண்டும் இணைந்தால் ஏற்படும் ஊட்டச்சத்து பண்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துக் கொண்டால் ஆச்சரியம் ஏற்படும். 


  • தேன் மற்றும் வாழைப்பழத்தின் நன்மைகள்
  • இரண்டும் இணைந்தால் ஊட்டச்சத்து அதிகரிக்கும்
  • தேனுடன் வாழை சேர்ந்தால் தித்திக்கும் அழகு!

Banana + Honey Combo: தேன் மற்றும் வாழைப்பழத்தின் நன்மைகள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், இவை இரண்டும் இணைந்தால் ஏற்படும் ஊட்டச்சத்து பண்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துக் கொண்டால் ஆச்சரியம் ஏற்படும். உடலின் இயல்பான செயல்பாட்டிற்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்ட்சத்துக்களை வழங்கும் இந்த ஜோடி, அழகுக்கு அழகூட்டும் என்பது பலருக்கு தெரியாது. இந்த இரண்டு ஆரோக்கிய உணவு பொருட்களும் அழகுசாதனப் பொருட்களிலும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வீட்டிலேயே, ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட இந்த கலவையை பயன்படுத்தி ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்தலாம். 

வாழைப்பழம் ஒரு சிறந்த மற்றும் முற்றிலும் பாதிப்பில்லாத ஆண்டிடிரஸன்ட் ஆகும். வாழைப்பழத்தின் கூழ் மனித உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்க உதவுகிறது, இது மகிழ்ச்சியின் ஹார்மோன் ஆகும். எனவே, வாழைப்பழத்தை தினமும் உட்கொள்வது, மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஏற்படாமல் இருக்க உதவும். நீண்ட கால அளவில் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆற்றல் இழப்பு ஏற்படாது.  பிறகு ஆற்றலை விரைவாக மீட்டெடுக்க முடியும்.

தேன் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சேர்க்கும்போது, அந்தக் கலவையின் ஆரோக்கிய நன்மைகள் வைட்டமின்களை அதிகரிக்கச் செய்கிறது. வாழைப்பழ கூழில் உள்ள வைட்டமின் சி குளிர்கால சளி மற்றும் தொற்றுநோய்களை சமாளிக்க உதவுகிறது; வயதான செயல்முறையை மெதுவாக்குகிறது மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. வைட்டமின் பி, மன அழுத்தம், தூக்கமின்மை, முடியில் ஏற்படும் சேதம் மற்றும் முகப்பரு ஆகியவற்றை சமாளிக்க உதவுகிறது.

இதிலுள்ள கரோட்டின் வயதான செயல்முறையை மெதுவாக்குகிறது, அத்துடன் புற்றுநோய் மற்றும் இருதய நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ சருமத்தை மிருதுவாகவும் மென்மையானதாகவும் மாற்றுகிறது மற்றும் மனநிலையையை மேம்படுத்துகிறது.


வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் பொட்டாசியம் பற்றாக்குறையை சமாளிக்கும். இதனால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் பிரச்சனை போன்றவை தவிர்க்கப்படும். அதே நேரத்தில், தேனில் உள்ள பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் பல பயனுள்ள தாதுக்களான, மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம், சோடியம், குளோரின் மற்றும் சல்பர் உடலுக்கு நன்மையைச் செய்யும்.

தேனில் பி1, பி2, பி3, பி5, பி6 மற்றும் சி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பூஞ்சை காளான், வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள தேன், இரத்தத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக இருக்கிறது.

இருப்பினும், நீங்கள் டயட்டில் இருந்தால், வாழைப்பழத்துடன் தேனும் சாப்பிடுவதை ஒரு குறிப்பிட்ட அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழம் மற்றும் தேன் கலவையை, சருமத்திற்கு, தலைமுடிக்கும் ’பேக்’- ஆக போடுவது எந்தவகை சருமத்திற்கும் பொருத்தமானது ஆகும்.

உடலிலும், முடியிலும் ஈரப்பதத்தை தக்கவைத்து, புத்துணர்ச்சியூட்டும் இந்தக் கலவை, கெரடினைஸ் செய்யப்பட்ட செல்களை வெகுவாக நீக்கி, நிறத்தை மேம்படுத்துகிறது. இவை, செயற்கை பொருட்களைப் போன்று, தோல் எரிச்சலை ஏற்படுத்தாது என்பது கூடுதல் சிறப்பு. செலவில்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய அழகு சிகிச்சைக்கு வாழைப்பழமும் தேனும் ஏற்றவை  

தோல் வறட்சி மற்றும் செதில்களை அகற்ற, இந்த குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள்:

பாதி வாழைப்பழத்தில், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் வேகவைத்த ஓட்ஸ் மற்றும் கிரீம் ஒரு தேக்கரண்டி சேர்த்து, இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் காத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் சருமத்தைக் கழுவி, கிரீம் தடவவும். வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும். வறண்ட சருமத்திற்கு ஊட்டச்சத்து தருவதற்கு இதைவிட சிறந்தது எதுவும் இல்லை.




Comments