முளை கட்டிய தானியங்களை சாப்பிடும் சரியான முறை இது தான்... அறிவுறுத்தும் நிபுணர்கள்!

 முளை கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடுவதால், சில நேரங்களில் வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


  • முளை கட்டிய தானியங்கள், செடி மற்றும் விதை நிலையில் உள்ளன.
  • மாற்றங்கள் நிறைவடையாத எந்தவொரு பொருளையும் உடைத்து ஜீரணிக்க உடலுக்கு அதிக நேரம் எடுக்கும்.
  • பலவீனமாக இருப்பவர்கள் முளை கட்டிய தானியாங்களை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியத்த்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் முளை கட்டிய தானியங்களை அதிகம் உணவில் சேர்க்கின்றனர். முளை கட்டிய தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளன. பெரும்பாலானோர், முளை கட்டிய தானியங்களை  காலை உணவாக சாப்பிடுவார்கள். முளை கட்டிய தானியங்கள்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.ஆனால் சில சமயங்களில், அதனை செரிமானம் செய்வதில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் பல நேரங்களில் அசிடிட்டி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்கின்றனர். மேலும் முளை கட்டிய தானியங்களின் பலன்களை முழுமையாக பெற அதனை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

முளை கட்டிய தானியங்கள், செடி மற்றும் விதை நிலையில் உள்ளன. மாற்றங்கள் நிறைவடையாத எந்தவொரு பொருளையும் உடைத்து ஜீரணிக்க உடலுக்கு அதிக நேரம் எடுக்கும், அதன் காரணமாக வாயு மற்றும் அமிலத்தன்மை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு முளை கட்டிய தானியங்களை சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும். செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யாதவர்கள் அல்லது பலவீனமாக இருப்பவர்கள் முளை கட்டிய தானியாங்களை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

முளை கட்டிய தானியங்களை சாப்ப்பிடும் முறை

குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அல்லது செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பவர்கள் முளை கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடக்கூடாது. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் முளை கட்டிய தானியங்களை சாப்பிட விரும்பினால், முதலில் சிறிது எண்ணெய், இஞ்சி  போன்றவற்றை சேர்த்து சமைக்கவும்.

முளை கட்டிய தானியங்களை சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

முளை கட்டிய தானியங்களில் பல வகையான சத்துக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பல நேரங்களில் உடலால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்ச முடியாது. இதன் காரணமாக முளைகளை பச்சையாக அல்ல, சிறிது நேரம் சமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து சத்துக்களும் உடலுக்கு நன்றாக சென்றடையும்.


ALSO READ : Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!


Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....