காலை உணவு குறித்து குழப்பத்தில் இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான சூப்பரான டிப்ஸ்.....

 பொதுவாக பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில், காலை உணவு என்ன செய்யலாம் என குழப்பத்தில் இருப்போம்.

அவ்வாறு குழப்பத்தில் இருக்கும் போது சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் செய்துக் கொடுக்கலாம் இதற்காக எடுக்கும் நேரமும் சற்றுகுறைவாக தான் இருக்கும்.

அந்த வகையில் முட்டை சப்பாத்தி ரோல் எவ்வாறு தயாரிப்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.


தேவையான பொருட்கள்

முட்டை - 1

சப்பாத்தி - 6

பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தயாரிப்பு முறை

முதலில் தேவையானளவு சப்பாத்திகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இவையனைத்தும் தயார் நிலையில் வைத்து விட்டு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நாம் நறுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வதங்க விடவேண்டும்.

தொடர்ந்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி உதிரியாக வரும் வரை கிளறுதல் கட்டாயமாகும். மேலும் 2 நிமிடங்களின் பின்னர் இதனை அடுப்பிலிருந்து இறக்க விட வேண்டும்.

பின்னர் சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் வைத்து, சிறிது சாஸ் விட்டு சுருட்டுங்கள். தற்போது சுவையான முட்டை ரோல் தயார்!     


ALSO READ : உடல் சூடு அதிகமா இருக்க! வெந்தயக்களி செய்து சாப்பிடுங்க...

Comments