உடல் சூடு அதிகமா இருக்க! வெந்தயக்களி செய்து சாப்பிடுங்க...

 சித்த மருத்துவம், ஆயுர்வேதம் முதல் அனைத்திலும் மருந்து பொருளாக பயன்படுத்தப்படும் வெந்தயத்தில் எண்ணற்ற பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துதல், இதயநோய், உயர்ரத்த அழுத்தம், புற்றுநோய் என பல கொடூர நோய்களுக்கு மருந்தாகிறது வெந்தயம்.

இந்த சின்னஞ்சிறு விதைகளில் ஒளிந்துள்ள மற்ற பலன்கள் பற்றி பார்க்கலாம்.

பயன்கள்

* வெந்தயத்தில் உள்ள கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

* வெந்தயத்தில் உள்ள டயாஜினின் சத்து, கர்ப்பப்பையை வலுவாக்குவதுடன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சீராக்குகிறது.

* சிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் அரிந்திட்டு சாப்பிட்டு வர பருமனான உடல் எடை குறையும்.


* வெந்தயத்தை முதல் நாள் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஏராளமான பலன்களை பெறலாம், இது உடல் சூட்டை குறைப்பதுடன் செரிமானத்தை சீராக்குகிறது.

* ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகப் பொடி கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

* வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அரை டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தீர்வாகும்.

இப்படி எண்ணற்ற பலன்களை கொண்டுள்ள வெந்தயத்தை வைத்து வெந்தயக்களி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெந்தயம் - 50 கிராம்
புழுங்கல் அரிசி- 200 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி - 200 கிராம்  

வெந்தயம் மற்றும் புழுங்கல் அரிசி இரண்டையும் சுமார் ஆறு மணிநேரத்துக்கு ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும், இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி படாமல் கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கைவிடாமல் நன்கு கிளற வேண்டும், நன்றாக வெந்து கையில் ஒட்டாத வண்ணம்(தண்ணீரில் விரல் விட்டு மாவை தொட்டால் ஒட்டக்கூடாது) வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடலாம்.

மிதமான சூடு இருக்கும் போது இதை ஒரு பாத்திரத்தில் இட்டு நடுவில் வெல்லம் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையான வெந்தயக்களி தயார்!!!




Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....