இன்ஸ்டாகிராம் யூஸர்களுக்கு குட்நியூஸ்... இந்த புது அப்டேட் பற்றி தெரியுமா?

 இன்ஸ்டாகிராம் ஆப்-பை சமீபத்திய புதிப்பித்திருந்தால் இந்த அம்சத்தை DM-யில்இளம் தலைமுறையினர் இடையே பிரபலமான தளமாக உள்ள இன்ஸ்டாகிராம், தனது யூஸர்களின் தேவை மற்றும் விருப்பத்தை அறிந்து அடிக்கடி புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

டிக்-டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் அதன் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 2022ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியா முழுவதும் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 11 கோடியே 87 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமை டவுன்லோடு செய்துள்ளனர்.

சமீபத்தில் கூட ஃபேஸ்புக், ட்விட்டர் போல் பிறரது போஸ்ட்களை ரீ-போஸ்ட் செய்யும் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இன்ஸ்டாகிராமில் தற்போது பிறருடைய ஸ்டோரிக்களை ரீபோஸ்ட் செய்யும் அம்சம் உள்ளது போலவே, போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் பதிவுகளை ரீபோஸ்ட் செய்யவதற்கான அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. அந்த ஆப்ஷன் செயல் வடிவம் பெறும் முன்பே மற்றொரு அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் இந்த மாதம் முழுவதும் பல புதிய அம்சங்களை சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. யூடியூப் மியூசிக்கை இன்ஸ்டாகிராமிற்குப் பகிர்வது முதல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு வருமான வாய்ப்பளிப்பது வரை புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது இன்ஸ்டாகிராம் யூஸர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, அறிவிப்புகளை வெளியிடவும், செய்திகளை அல்லது எண்ணங்களை எழுத்துக்கள் மூலமாக பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா யூஸர்களின் Direct messages (DMs) பக்கத்தில் 'நோட்ஸ்' (Notes) என்ற புதிய அம்சம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் யூஸர்கள் 60 எழுத்துக்களை மட்டுமே கொண்ட தகவல்களை தன்னை பின்தொடர்பவர்களுடன் பகிர முடியும்.

ஒரே நேரத்தில் ஒரு நோட்ஸை மட்டுமே பதிவிட முடியும் என்றும், மற்றொன்றை பதிவிட்டால் முந்தையது தானாகவே அழிந்துவிடும் வகையிலும் இந்த ஆப்ஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. யூஸர்களின் நோட்ஸுக்கு பின்தொடர்பவர்கள் பதிலளிக்கக்கூடிய வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் யூஸர்கள் பதிவிடும் நோட்ஸ் ஆனது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போலவே 24 மணி நேரத்திலேயே அழிந்துவிடக்கூடியது.

நோட்ஸ் ஆப்ஷனை ஏன் பயன்படுத்த வேண்டும்?

நோட்ஸ் அம்சம் Direct messages (DMs) பக்கத்தின் மேல் பகுதியில் உள்ளதால், அதில் இன்ஸ்டாகிராம் யூஸர்கள் பதிவிடும் அறிவிப்பு, செய்தி என எதுவாக இருந்தாலும் அவர்களை பின்தொடர்பவர்களை எளிதாக அடைய உதவும். கன்டென்ட் கிரியெட்டர்களும், வணிகங்களும் நோட்ஸ் மூலமாக செய்திகள், புதுப்பிப்புகள் அல்லது பொருத்தமான தகவல்களை அதிகமான பின்தொடர்பவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இதனால் உங்கள் வீடியோ, போட்டோ போன்ற தகவல்களை எளிதாக அறிவிக்க முடியும்.

நோட்ஸ் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

இன்ஸ்டாகிராம் ஆப்-பை சமீபத்திய புதிப்பித்திருந்தால் இந்த அம்சத்தை DM-யில் காண முடியும். ஒருவேளை, இந்த அம்சம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதனை நீக்க முடியாது.

உங்களைப் பின்தொடர்பவர்களுடன் இன்ஸ்டாகிராம் நோட்ஸை எவ்வாறு பகிர்வது என்பதை அறிந்து கொள்ளலாம்...

- முதலில், உங்கள் Instagram பயன்பாட்டைத் திறந்து, DM-க்கு செல்லவும்.

- இப்போது, ​​'உங்கள் குறிப்பு' (your Note) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் புதிதகாக நோட்ஸை சேர்க்கும் பக்கத்திற்குச் செல்வீர்கள்.

- அதில் உங்கள் நோட்ஸை டைப் செய்ததும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ட் போல உங்களை பின்தொடருபவர்கள் 24 மணி நேரமும் பார்க்கக் கிடைக்கும். மேலும் அதற்கு அவர்களால் பதிலளிக்கவும் முடியும்.



ALSO READ : வாட்ஸ்அப் வீடியோ காலில் புதிய வசதி..! இனி இங்கேயும் மீட்டிங் நடத்தலாம்...

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....