வாட்ஸ்அப் வீடியோ காலில் புதிய வசதி..! இனி இங்கேயும் மீட்டிங் நடத்தலாம்...

 இந்த வாரம் முதல் அழைப்பு இணைப்புகள் கிடைக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் கணக்கிற்கான அம்சத்தைப் பெறுவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.

கொரோனா காலம் தொடங்கியதில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் என்பது அதிகம் புழக்கத்தில் வந்துவிட்டது.பள்ளி வகுப்பு முதல் வெளிநாடுகளுடனான அரசுமுறை ஒப்பந்தங்கள் வரை எல்லாமே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தான் நிகழ்ந்தது.

இந்த நேரத்தில் ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகள் அதிகம் வளர்ச்சி பெற்றது. அதில் ஒரு மீட்டிங்கான லிங்க் உருவாக்கி பல தளங்கள் மூலம் பல்வேறு நபர்களுக்கு பகிரும் வசதி இருக்கிறது. அந்த ஒற்றை லிங்க் வைத்து யாரும் மீட்டிங்கில் இணையும் வாய்ப்பை வழங்குகிறது.

வாட்சப் செயலியில் வீடியோ கால் வசதி இருந்தாலும் நம்மிடம் எண் உள்ளவர்களுடன் மட்டும் தான் பேச முடியும். மற்றவர்களை அது அனுமதிக்காது. இது குறுகிய ஒரு வட்டத்தினரிடம் மட்டும் பேசும் வாய்ப்பை அளிக்கும்.

அதை மாற்றி மற்ற வீடியோ கான்ஃபரன்ஸ் செயலிகளை போல் லிங்க் கொண்டு நுழையும் வசதியை வாட்ஸ் அப் தொடங்க உள்ளது. இந்த வாரம் முதல் அழைப்பு இணைப்புகள் கிடைக்கும் என்று WhatsApp கூறுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் கணக்கிற்கான அம்சத்தைப் பெறுவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம் என்று வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்ட், ட்வீட் மூலம் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் அழைப்புப் பிரிவில் அழைப்பு இணைப்புகள் கிடைக்கும் மற்றும் அழைப்பு இணைப்பை உருவாக்கு என்ற விருப்பம் அழைப்பு வரலாறு பட்டியலில் மேலே இருக்குமாறு அமைக்கப்படும். இணைப்பை உருவாக்கி, உங்கள் வாட்சப் மூலம் மற்ற நபர்களுக்கு அதை பகிர முடியும். அந்த இணைப்பு கொண்ட யாரும் அந்த அழைப்பில் இணையலாம்.

இது குறித்த கூடுதல் விவரங்களை வரும் வாரங்களில் வாட்சப் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழைப்பு அம்சம் இணைய பதிப்பிற்கு வரும்போது, வாட்சப் ​​டெஸ்க்டாப்பிலும் அழைப்பு இணைப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ : YouTube shorts எடுப்பதில் கில்லாடிகளாக நீங்கள்?.. பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை இனி நீங்களும் பெற முடியுமாம்!


Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....