YouTube shorts எடுப்பதில் கில்லாடிகளாக நீங்கள்?.. பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை இனி நீங்களும் பெற முடியுமாம்!

 இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டபிறகு இன்ஸ்டா ரீல்ஸில் மக்களின் மோகம்.

இன்றைக்கு மக்களிடம் பிரபலமாகி வரும் YouTube shorts மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை படைப்பாளிகளுக்கு YouTube வழங்கியுள்ளது. இதில் இசையைப் பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் வருவாய் பங்கு எவ்விதத்திலும் மாறாமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

YouTube மக்களிடம் பிரபலமாகியுள்ள வார்த்தைகளில் ஒன்றாக மட்டுமில்லாது மக்களை தன் வசமாக்கியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இன்றைய நிகழ்வுகள், செய்திகள், பாடல்கள், கதைகள், சமையல் குறிப்புகள், குழந்தைகள் செல்லும் சுட்டித்தனங்கள் என பல விதமான வீடியோக்களை YouTube ல் பகிர்ந்து வருகின்றனர்.

இதில் வீடியோக்கள் அப்லோட் செய்தால் நிச்சயம் வருமானம் ஈட்டலாம் என்ற அனைவருக்கும் தோன்றியது. இதனால் தான் தற்போது YouTube சேனல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. விளையாட்டுத்தனமாக எடுக்கும் வீடியோக்கள் அனைத்தும் பிரபலமானதையடுத்து ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக்கொண்டு புதிய யூடியூப் சேனல்களை ஆரம்பித்துவருகின்றனர்.

பொதுவாக குழந்தைகள், இளம் தலைமுறையினர், பெண்கள், முதியவர்கள் என அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப பல வீடியோக்கள் வைரலாகிறது. 1000 சப்கிரைபர்ஸ் இருந்தால் போதும் நிச்சயம் விளம்பரங்கள் வருவதோடு உங்களுக்கு அதன் மூலம் வருவாய் கிடைக்கும். ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் தலைப்புகள்,

வீடியோக்களின் தரம், எதார்த்தமான நடிப்புகள், கவர்ந்திழுக்கும் இசை இருந்தால் போதும் அனைவரும் YouTube ல் சாதித்துவிடலாம். இதனால் தான் பல படைப்பாளர்கள் ஆர்வத்துடன் பல வீடியோக்களை அப்லோடு செய்கின்றனர்.

இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டபிறகு இன்ஸ்டா ரீல்ஸில் மக்களின் மோகம் அதிகமான சமயத்தில் தான் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னதாக டிக் டாக் பயனாளிகளுக்காக YouTube shorts வீடியோவை அறிமுகப்படுத்தியது. அந்நாளிலிருந்து மக்களிடம் வேகமாக ரீச் ஆகி வருகிறது. இவ்வாறு ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கி யூடியூப்பில் அப்லோடு செய்கின்றனர்.

இவ்வாறு அப்லோடு செய்யும் வீடியோக்களுக்கான பணம் சம்பாதிக்க கூகுள் உதவியிருந்தாலும், இப்போது யூடியூப் பார்ட்னர் புரோகிராம் மூலம் பணமாக்குவதற்கான வாய்ப்பை YouTube வழங்குகிறது.

மேலும் YouTube ஸ்டுடியோவில் உள்ள புதிய கிரியேட்டர் மியூசிக் பக்கம் நீண்ட வீடியோக்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பல டிராக்குகளுக்கான அணுகலை வழங்குகிறது. இதோடு 2023 ஆம் ஆண்டில் உரிமம் பெற்ற இசை மூலம் படைப்பாளிகள் தங்கள் குறும்படங்கள் மற்றும் நீண்ட வடிவ வீடியோக்களைப் பணமாக்க அனுமதிக்கும் புதிய திட்டத்தை YouTube அறிவித்துள்ளது. இதில் நீங்கள் இசையைப் பயன்படுத்தினாலும், இல்லாவிட்டாலும் வருவாய்ப் பங்கு ஒரே மாதிரியாக இருக்கும் என்று YouTube தெரிவித்துள்ளது.

பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த குறும்படங்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதோடு, படைப்பாளர்கள் தங்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் கிரியேட்டர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையிலிருந்து, Shorts பார்வைகளில் தங்களின் பங்கின் அடிப்படையில் விநியோகிக்கப்பட்ட வருவாயில் 45 சதவீதத்தை அவர்கள் வைத்திருப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய கிரியேட்டர் மியூசிக் இப்போது அமெரிக்காவில் பீட்டாவில் உள்ளது, அடுத்த ஆண்டு மேலும் பல நாடுகளுக்கு விரிவடையும் எனவும் YouTube தெரிவித்துள்ளது.


ALSO READ : இந்தியாவில் ஆவிகள் நடமாட்டம் நிறைந்த ஐந்து சாலைகள்! சென்னையிலும் இருக்காம்...


Comments