இந்தியாவில் ஆவிகள் நடமாட்டம் நிறைந்த ஐந்து சாலைகள்! சென்னையிலும் இருக்காம்...
Ghost Street | பற்பல கதைகளுடனும் நம்பவே முடியாத அமானுஷ்ய சம்பவங்களும் நிறைந்த சாலைகளில் பயணம் செய்து அந்த அனுபவத்தை பெறுவது வேறொரு வகையான த்ரில்.
காரை எடுத்துக்கொண்டு, ஜன்னல் கண்ணாடிகளை முழுவதும் இறக்கிவிட்டு நீண்ட தூர மலை பயணங்கள் செய்வது ஒரு அலாதியான இன்பத்தை கொடுக்கும் அதுவும் பலவித வளைவுகளுடனும் மிக அற்புதமான இயற்கை காட்சிகளையும் கண்டு களித்துக் கொண்டு பயணம் செய்வது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வேறு விதமான அனுபவத்தை பெறுவதற்காக பயணம் செய்பவர்களும் உண்டு.
பார்ப்பதற்கே பயம் தரக்கூடியதும் அமானுஷ்யங்கள் நிறைந்ததுமான பல்வேறு சாலைகள் நம் நாடு முழுவதும் இருக்கின்றன. பற்பல கதைகளுடனும் நம்பவே முடியாத அமானுஷ்ய சம்பவங்களும் நிறைந்த சாலைகளில் பயணம் செய்து அந்த அனுபவத்தை பெறுவது வேறொரு வகையான த்ரில். இப்படிப்பட்ட அமானுஷ்ய விஷயங்களை தேடி தேடி சாகச பயணம் செய்பவரா நீங்கள். அப்படி எனில் நீங்கள் கண்டிப்பாக பயணம் செய்ய வேண்டிய ஐந்து முக்கியமான சாலைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
ப்ளூ கிராஸ் சாலை, சென்னை:
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் உள்ள இந்த சாலை கண்டிப்பாக பலவீனமான இதயம் கொண்டவர்களுக்காக இல்லை. இந்த சாலையில் பலவித அமானுஷ்ய சம்பவங்கள் பற்றிய கதைகள் இன்றும் வந்தவண்ணம் உள்ளன. எண்ணில் அடங்காத தற்கொலைகள் இந்த சாலையில் நிகழ்ந்துள்ளன. அது மட்டும் இல்லாமல் இதில் நடந்து சென்ற பலரும் தன்னை யாரோ பின் தொடர்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், சிலர் யாரோ தங்களை கடந்து செல்வதை பார்த்ததாகவும் மிக திகிலுடன் தெரிவித்துள்ளனர். அதற்கேற்றபடி மிகவும் விசாலமாகவும் அதே சமயத்தில் மரங்கள் நிறைந்து அடர்த்தியாகவும் காணப்படும் இந்த இடத்தில் பயணிப்பது ஒருவித பயத்தை கண்டிப்பாக உண்டாக்குகிறது. பகல் நேரத்தில் பயணிப்பதே ஒருவித பயத்தை தருகிறது என்றால் இரவில் சொல்லவே தேவையில்லை.
கசரா காட், மும்பை நாசிக் நெடுஞ்சாலை:
மும்பை நகரின் நாசிக் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கசாரா காத் என்னும் பகுதி அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவும் ஆவிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் அறியப்படும் ஒரு இடமாகும். இதில் பயணித்த பலர் தலையில்லாமல் முண்டமாக சுற்றி தெரியும் ஒரு பெண்ணை கண்டதாகவும் அவள் கொடூரமாக சிரிக்கும் சத்தத்தை கேட்பதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். இது உண்மையோ என்று தோன்றும் அளவிற்கு இந்த பகுதியில் அதிக அளவிலான விபத்துக்கள் இன்றளவும் நடந்த வண்ணம் உள்ளன.
சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் நடப்பாதை, தலமலை, தமிழ்நாடு:
தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக உள்ளது சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம். இந்தக் காட்டுப் பகுதிகளில் வீரப்பன் பல காலம் பதுங்கி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் விவரிக்க முடியாத அமானுஷ்யங்கள் நிறைந்த பகுதியில் இந்த சத்தியமங்கலம் வனப்பகுதி முக்கியமான ஒன்றாக உள்ளது. இதில் பயணம் செய்த பலர் பறக்கும் விளக்குகளை போன்ற ஒளியை கண்டதாகவும் மற்றும் பல அமானுஷ்ய சத்தங்களையும், யாரோ இருப்பது போன்ற ஒரு வித உணர்வை பெற்றதாகவும் திகிலுடன் விவரித்துள்ளனர். வேறு சிலரோ கொல்லப்பட்ட வீரப்பனின் ஆவி இன்னும் அந்த இடத்தில் ஆக்ரோஷத்துடன் அலைவதாக நம்புகின்றனர்.
கஷேடி காத், மும்பை:
மும்பை டு கோவா நெடுஞ்சாலையில் உள்ள கஷேடி காத் என்ற இந்த பகுதி மட்டுமல்லாமல், மும்பையில் இருந்து கோவா செல்லும் அந்த ஒட்டு மொத்த நெடுஞ்சாலையே அமானுஷ்யங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. இதில் பயணம் செய்த பலரும் தாங்கள் ஆவிகளை கண்டதாகவும், அவை தங்களை பின் தொடர்ந்து வருவது போலவும் தங்கள் வழியில் குறுக்கிடுவது போலவும் உணர்ந்ததாக அடித்துக் கூறுகின்றனர்.இதில் இன்னும் திகிலான ஒரு கதை நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் மனித கறி உண்ணும் சூனியக்காரி ஒருத்தியின் ஆவி உலா வருவதாகவும் இன்னமும் அவளுக்கு ரத்தம், இறைச்சி, மனித சதை ஆகியவற்றின் மீது அலாதி பிரியமாக இருப்பதாகவும் ஒரு கதை வலம் வருகிறது. இந்த வழியே பயணிப்பவர்கள் தங்கள் காரில் எடுத்துச் சென்ற அசைவ உணவுகள் பலவும் மாயமாக மறைந்து உள்ளதை இதற்கு ஆதாரமாக கூறுகின்றனர். அந்த சூனியக்காரி தான் அவற்றை எடுத்துக் கொண்டாள் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் சாலை முலுன்ட், மகாராஷ்டிரா:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முலுன்ட் பகுதியில் இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் சாலையில் உள்ள சிக்னல் பலவித அமானுஷ்ய மர்மங்களை தன்னுள் கொண்டுள்ளது. அதில் பயணம் செய்த பலரும் வெள்ளை புடவை உடுத்திய ஒரு பெண் அந்த சாலை முழுவதும் இங்கும் அங்கும் வலம் வருவதாக கூறுகின்றனர். அவள் தான் அங்கு பலவித விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும் நம்புகின்றனர். இது உண்மையோ என்று நம்பும் அளவிற்கு அங்கு நடக்கும் பல விபத்துகளும் அமாவாசை இரவிலேயே நடந்துள்ளது. அவர்களும் அந்த பெண்ணின் நடமாட்டத்தை அம்மாவாசை இரவுகளில் அதிகமாக பார்த்துள்ளதாக கூறுகின்றனர்.
Comments
Post a Comment