சாப்பிடுவதில் இப்படியும் ஒரு உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்..!
சாப்பிடுவதில் இப்படியும் ஒரு உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்..!
போட்டி தொடங்குவதற்கு முன், ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் 10 அவுன்ஸ் கோழி பாத கறியை நடுவர் சோபியா கிரீன்கேர் வழங்கினார். ஒரு நேரத்தில் ஒரு கோழி பாத கறியை மட்டுமே சாப்பிட முடியும். ஒன்றுக்கு மேற்பட்டவை சாப்பிட்டால் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும். பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் 3.8 கிராம் உட்கொள்ள வேண்டும், இது சாதனைக்கு தகுதியானதாகக் கருதப்பட்டது.
போட்டி தொடங்கியதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியை செயல்படுத்தினர். சிலர் நேரம் தொடங்கியதும் வாய் முழுக்க அடைத்துக்கொண்டு விழுங்க போராடிக்கொண்டு இருந்தனர். ஆனால் சிமானிலே பொறுமையாக சீரான வேகத்தில் கோழி பாதங்களை உண்டார்.
அதில் சிமானிலே 60 வினாடிகளில் 4.26 அவுன்ஸ்- அதாவது 121 கிராம் கோழி கால் விரல்கள் கறியை உட்கொண்டு வெற்றி பெற்றார். இது அவரது போட்டியாளர்களை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.
அந்த போட்டியில் வென்றதோடு ஒரு புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார் . ‘இந்த பட்டத்தை பெற்ற முதல் நபர் சிமானிலே’ என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது.
ALSO READ : பொம்மை வீடு கட்டி கொடுத்த தந்தை..குதுகலமாக விளையாடும் குழந்தையின் க்யூட் வீடியோ வைரல்....
Comments
Post a Comment