எடையை வேகமாக குறைக்கும் ஆளி விதை! இப்படி எடுத்து கொள்ளுங்க.. விரைவில் பலன்...

 பொதுவாக ஆளி விதை பார்க்க சிறிதாக இருந்தாலும் அதிலுள்ள ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகம் நிறைந்துள்ளது.

இதில் ஏராளமான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. அதோடு ஆன்டி இன்பிளமேட்டரி தன்மை கொண்டது.

இந்த ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.  இதனால் தான் இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

அந்தவகையில் தற்போது உடல் எடையை குறைக்க ஆளிவிதைகளை எப்படி எல்லாம் சேர்த்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

எப்படியெல்லாம் எடுத்து கொள்ளலாம்? 


  • தினசரி சாப்பிடும் சாலட்டுகளில் சுவையைக் கூட்டுவதற்காக எள், நட்ஸ் ஆகியவற்றை தூவி சாப்பிடுவோம். அதில் ஆளி விதையையும் பயன்படுத்தலாம்.

  • ஆளி விதையை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அதை உங்களுடைய தினசரி ஸ்மூத்தியில் சேர்த்து குடிக்கலாம்.

  • தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியில் வெந்நீர் கலந்து டீ போல தயார் செய்து குடித்து வரலாம்.

  • சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக் கொள்வது போல அப்படியே தினமும் ஒரு ஸ்பூன் வீதம் ஆளி விதை பொடியை சாப்பிடலாம்.

  • தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விட்டு அந்த வெந்நீருக்குள் ஆளி விதையை போட்டு 15 நிமிடங்கள் மூடி வைத்து விட வேண்டும். இப்போது அந்த ஆளி விதைகளை வடிகட்டி நீக்கிவிட்டு, அந்த வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாநு பிழிந்தால் ஆளி விதை டீ ரெடி. ஆனால் ஆளி விதையை சேர்த்து கொதிக்க வைக்கக் கூடாது. அது ஜெல்லாக மாறிவிடும்.  

  • ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் நறுக்கி மிக்சியில் சேர்த்து இதனுடன் யோகர்ட் மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த ஸ்மூத்தியை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியைச் சேர்த்து கலக்கி இதை தினமும் இரவு வேளையில் அல்லது ஸ்நாக்ஸ் நேரங்களில் எடுத்துக் கொள்வதால் எளிதில் குறைவாக கலோரியில் வயிறு நிறைந்து விடும்.



Comments