Bay Leaf: எடையை குறைக்க பிரிஞ்சு இலை தண்ணீரை குடிச்சு பாருங்க, உடனடி பலன் கிடைக்கும்...

 Bay Leaves Water For Weight Loss: பிரியாணி இலை உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால், உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும். 


  • பிரியாணி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
  • வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது.

எடை இழப்புக்கு பிரிஞ்சி இலையின் நன்மைகள்: பிரியாணி அல்லது பிரிஞ்சி இலைகள் அனைத்து வீடுகளிலும் கிடைக்கும் இலைகளாகும். இந்த இலை மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது ஒரு மசாலா பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற பல விஷயங்களுக்கும் பயன்படும் ஒரு அரிய வகை இலை ஆகும். காய்கறிகளின் மற்றும் பிற உணவுகளின் சுவையை அதிகரிப்பதோடு உடல் ஆரோக்கியத்துக்கும் இது நன்மை பயக்கும்.

பிரியாணி இலை உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால், உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், இயற்கையான தீர்வை தேடினால், பிரியாணி இலையின் உதவியை நாடலாம். பிரியாணி இலை தண்ணீரைக் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் அபரிமிதமான நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்புக்கு, பிரியாணி இலையை இந்த வழியில் பயன்படுத்தலாம்: 

எடை மற்றும் உடல் கொழுப்பைக் குறைக்க, ஒரு கிளாஸ் வெந்நீரில் 12 பிரிஞ்சி இலைகளைப் போட்டு வைக்கவும். பின், இந்த இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, பிரியாணி இலையை நன்றாக குளிர விடவும். பிரியாணி இலையின் ருசியும் வாசனையும் நீரில் நன்றாக கலந்த பின்னர் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவும். பின் இதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

பிரியாணி இலை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது:

பிரியாணி இலை நீரை உட்கொள்வதால், உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. பிரியாணி இலை நீரில் மிகக் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. 

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

பிரியாணி இலைகளில் இருக்கும் நார்ச்சத்தின் பண்புகள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. பிரியாணி இலைகளில் உள்ள கால்சியம் உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது.

பிரியாணி இலையின் பிற நன்மைகள்:

- மூச்சுத் திணறலை குறைக்கும்
- சோர்வு நீங்கும்
- நீரிழிவு நோய்க்கு சிறந்தது
- தொற்றுநோயைத் தடுக்கும்
- மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது



Comments