10 நிமிடத்தில் செய்யலாம் பிரெட் முட்டை மசாலா ....

 காலையில் வித்தியாசமான டிபன் செய்ய விரும்பினால் இதை செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.



தேவையான பொருட்கள்:

 பிரெட் - 3 துண்டுகள்,

 முட்டை - 1, 

பெரிய வெங்காயம் - 1

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்,

 உப்பு - தேவையான அளவு. 

தாளிப்பதற்கு:

 கடுகு - 1/2 டீஸ்பூன், 

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,

 சீரகம் - 1/4 டீஸ்பூன்,

 பச்சை மிளகாய் - 1 ,

 பெருங்காயத் தூள் - சிட்டிகை, 

கறிவேப்பிலை - சிறிது, 

எண்ணெய் - தேவையான அளவு.

 செய்முறை:

 வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 பிரெட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். 

வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 

முட்டை உதிரியாக வந்ததும் அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு டோஸ்ட் செய்து இறக்கினால், பிரெட் முட்டை மசாலா ரெடி!!!



Comments