தித்திப்பான உருளைக்கிழங்கு அல்வா ....

 குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கில் சூப்பரான அல்வா செய்யலாம் வாங்க..


தேவையான பொருட்கள்:

 உருளைக்கிழங்கு - அரை கிலோ
 சர்க்கரை - 1/4 கப், 
பாதாம் - 1 கையளவு,
பிஸ்தா - தேவையான அளவு,
 நெய் - தேவையான அளவு. 

செய்முறை:

 உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

 பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

 வதக்கும் போது, நெய் சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். பின் அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும்.

 கடைசியாக பாதாம், பிஸ்தாவை சேர்த்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு அல்வா ரெடி!!!




Comments