சத்தான ஸ்நாக்ஸ் ராகி பக்கோடா ....

 இந்த ஸ்நாக்ஸ் ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம். கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

 கேழ்வரகு மாவு - 1 கப் 

வெங்காயம் - 1 

பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி

 ப. மிளகாய் - 3 

பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை 

கறிவேப்பிலை - ஒரு கொத்து 

உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை :

 * ப.மிளகாய், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

 * பின்பு அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

 * அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார். 

* இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.


ALSO READ : கடையில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் .....

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....