கடையில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் .....

 ஆலு புஜியாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். குழந்தைகளுக்கு பிடித்தான அருமையான ஸ்நாக்ஸ் இது.

தேவையான பொருட்கள்

 உருளைக்கிழங்கு - அரை கிலோ

 புதினா - ஒரு கைப்பிடி 

ப.மிளகாய் - 1 

கடலை மாவு - 1 கப்

 மிளகாய்தூள் - சுவைக்கேற்ப,

 சாட் மசாலா - சுவைக்கேற்ப, 

சீரக தூள் - சுவைக்கேற்ப 

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

 உப்பு - சுவைக்கேற்ப

 செய்முறை:

 • உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து வைத்து கொள்ளவும்

 • மிக்சியில் புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசிய அரைத்து கொள்ளவும்

 • ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரைத்த புதினா விழுது, மற்றும் சுவைக்கேற்ப உப்பு, மிளகாய்தூள், சாட் மசாலா, சீரக தூள் மற்றும் சிறிது பெருங்காயம் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் .

 • கலந்த உருளைக்கிழங்கு கலவையை சேவை அச்சில் போட்டு வைக்கவும்.

 • கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சேவை அச்சில் உள்ள கலவையை பிழிந்து மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

 • பொரித்த சேவையை ஒரு தட்டில் போட்டு சிறிது சிறிதாக உடைத்து, சிறிது அளவு சாட் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

 • இப்போது ஆலு புஜியா ரெடி.


ALSO READ : தினை - தேங்காய்ப்பால் புலாவ் .......

Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....