பற்களில் உண்டாகும் கறைகளை ஒரே நாளில் போக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்...
பற்களில் மஞ்சள் கறை மற்றும் சொத்தை போன்றவைகள் உண்டாகும். இவை நீண்ட காலமாக பலருக்கும் இருக்கும். அதை எப்படி சரி செய்வது என தெரியாமல் மருத்துவர்களை நாடுவார்கள்.
ஆனால், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரிசெய்யலாம். இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும்.
இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம்.
இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.
அடுத்து, ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
பின்னர், பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
எலுமிச்சை சாறு பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வாயில் உள்ள கிருமிகள் , துர்நாற்றத்தையும் அழிக்கும். எனவே பேஸ்டுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறையும் ஊற்றி தேய்த்து பாருங்கள்...
ALSO READ : பரு வந்த தழும்பை மறைய வைக்கனுமா? இதோ சில எளிய வழிகள் உங்களுக்காக...
Comments
Post a Comment