பரு வந்த தழும்பை மறைய வைக்கனுமா? இதோ சில எளிய வழிகள் உங்களுக்காக...
பொதுவாக முகப்பருக்கள் வந்து போவதைவிட முகப்பருவால் ஏற்பட்ட தடங்களும் தழும்புகளும் மறையாமமல் இருப்பது கொடுமையானது.
இதற்கு மிக முக்கியக் காரணமே நம்முடைய சமச்சீரற்ற உணவு முறை, மாசுக்கள், சருமத்தி்ற்கு பயன்படுத்தும் பொருள்கள் வை தான். அது நம்முடைய முக அழகையே கெடுத்துவிடுகின்றது.
இதனை எளிய முறையில் கூட போக்கலாம். அந்தவகையில் முகப்பருக்களால் ஏற்படும் தடங்கள் மற்றும் தழும்புகளை நீக்க என்ன செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்து பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை தவறாமல் செய்து வந்தால் சில நாட்களிலேயே பருக்கள் வந்த இடத்திலுள்ள தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
கடலை மாவுடன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு திக்கான பேஸ்ட்டாகக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை வாரத்தில் மூன்று நாட்கள் இதை செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இரவில் தூங்கச் செல்லும்முன் முகத்தை நன்கு கழுவி விட்டு, தேங்காய் எண்ணெயை முகத்தில் நன்கு அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு, அப்படியே இரவு முழுக்க முகத்திலேயே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இதை தினமும் செய்து வர மிக விரைவாக பலன்கள் கிடைக்கும்.
ஆப்பிள் சிடார் வினிகருடன் 2 ஸ்பூன் சேர்த்து, அதனுடன் சில துளிகள் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து அதை சருமத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் 2 சொட்டு ஆப்பிள் சிடார் வினிகருடன் 10 சொட்டு தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அப்ளை செய்யுங்கள்.
கற்றாழை ஜெல்லை, சருமத்தை சுத்தம் செய்துவிட்டு முகத்தில் அப்ளை செய்து நன்கு 10 நிமிடங்கள் மசாஜ் செய்து விட வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து, அதை நேரடியாக முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் வரை உலரவிட்டு பின் முகத்தைக் கழுவ வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் சருமப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
சில துளிகள விளக்கெண்ணையை கையில் எடுத்து, முகத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எண்ணெயை அப்ளை செய்து, இரவு முழுக்க அப்படியே விட்டுவிட வேண்டும். பின்பு காலையில் வெதுவெதுதுப்பான நீர் கொண்ட முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
ALSO READ : வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?
Comments
Post a Comment