கொழுப்புச்சத்தே இல்லாத அபூர்வ பழம்! பல நோய்களை ஓட ஓட விரட்டும் அதிசய பழம் சிங்காரா.....
Healthy Food: சிங்காரா பழத்தில் கொழுப்புச் சத்தே கிடையாது. இதனால், உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது இந்த நீர் காஷ்கொட்டை
- புரதச்சத்து அதிகம் கொண்ட ‘இந்த’ பழத்தில் கொழுப்பே கிடையாது
- கொழுப்புச்சத்தே இல்லாத அபூர்வ பழம்!
- நோய்களை ஓட ஓட விரட்டும் அதிசய பழம் சிங்காரா
குளிர்காலம் என்பது பல சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களின் பருவமாகும். இந்த பருவத்தில் மிகவும் பொதுவான பழங்களில் ஒன்று வாட்டர் செஸ்ட்நட், அல்லது சிங்காரா என்று அழைக்கப்படும் பழம். இந்தப் பழம் எவ்வளவு ருசியாக இருக்கிறதோ, அதே அளவு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. குறிப்பாக ஆண்களுக்கு சிங்காரா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது வெறும் பழமாக மட்டும் உண்ணப்படுவதில்லை. இந்தப் பழத்தை காயவைத்து, அதை மாவாக அரைத்தும் பயன்படுத்துவார்கள். சிங்காராவின் மாவு மிகவும் சத்து மிக்கது. விரதம் இருக்கும் போது, வட இந்தியர்கள் பெரும்பாலும் சிங்காரா மாவில் செய்யப்பட்ட உணவுகளையே சாப்பிடுகிறார்கள்.
சிங்காரா பழத்தில் கொழுப்புச் சத்தே கிடையாது. இதனால், உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது. இதில், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் பி6, ரிபோஃப்ளேவின், தாமிரம் என நமக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
சிங்காரா பழத்தை அப்படியே சாப்பிடலாம், அதை வேகவைத்தோ அல்லது சுட்டோ சாப்பிடலாம். காய வைத்து மாவாகவும் பயன்படுத்தலாம். சிங்காராவின் மாவு, அரிசி மாவைப் போலவே இருக்கும்.
உடலில் உள்ள தைராய்டு அளவை பராமரிப்பதில் சிங்காரா என்ற நீர் கஷ்கொட்டை மிகவும் பயன் அளிக்கிறது. தைராய்டு இருந்தால், சிங்காரா என்னும் நீர் கஷ்கொட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் கணிசமான அளவு அயோடின் தைராய்டை சரியான அளவில் பராமரிக்கிறது.
அதேபோல உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடலில் சோடியம் சத்தின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விளைவைக் குறைக்கும் நீர் கஷ்கொட்டை என்பது இதன் முக்கியமான மருத்துவ குணம் ஆகும்.
இதன் ஊட்டச்சத்து மதிப்பும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீர் கஷ்கொட்டையை உண்பதால், உடலில் கட்டி உருவாவதும், வளர்வதும் தடுக்கப்படுகிறது. கணுக்காலில் வெடிப்பு இருந்தால், சிங்காராவை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், அது நிவாரணம் தருகிறது.
சிங்காரா இதயத்திற்கு உகந்த பழம். இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, சிங்காராவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. வைட்டமின் பி6 நிறைந்துள்ள சிங்காரா எனும் சீர் கஷ்கொட்டை, மனநிலையை மேம்படுத்தும். இந்தப் பழத்தை சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைக்கிறது.
இறந்த செல்களை சரிசெய்து வீக்கத்தைக் குறைக்கும் டையோஸ்மெடின், லுடோலின், ஃபிசெடின் மற்றும் டெக்டோரிஜினின் உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீர் கஷ்கொட்டையில் உள்ளன.
ALSO READ : உடலின் நச்சுக்களை நீக்கும் ‘சூப்பர்’ பானம் இது தான்!

Comments
Post a Comment