மழைக்கு சூடாக சாப்பிட சூப்பரான கேழ்வரகு பக்கோடா......

 கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று கேழ்வரகு பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

 கேழ்வரகு மாவு - 100 கிராம்,

 அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், 

தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், 

வெங்காயம் - 2 

பச்சை மிளகாய் - 1 

இஞ்சி - சிறிய துண்டு 

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

 உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.


செய்முறை :

 * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

 * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும். 

* சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.






Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....