புகை பிடிக்கும் பழக்கம் இருக்கா? இதை படித்தால் இன்றே விட்டுவிடுவீர்கள்!!

 Chronic Obstructive Pulmonary Disease: சிஓபிடி-யால், இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களின் ஆபத்து மிகவும் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


  • சிஓபிடி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சளி, காய்ச்சல் எளிதில் வரும்.
  • சிஓபிடி நோயாளிகளுக்கு இதய நோய்களின் ஆபத்து அதிக அளவில் அதிகரிக்கிறது.
  • சிஓபிடி நோயாளிகளில், இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களின் ஆபத்து மிகவும் அதிகரிக்கிறது.

சிஓபிடியின் அறிகுறிகள்: 

அதிகம் புகைபிடிக்கும் நபரா நீங்கள்? உங்களுக்கான முக்கிய செய்தி இது. இந்த பழக்கத்தை நீங்கள் தொடர்ந்தால், பெரிய நோய்க்கு ஆளாக நேரிடலாம். Chronic Obstructive Pulmonary Disease எனப்படும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் சிஓபிடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டால், உடலில் நுரையீரல் சுருங்கி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நோயின் காரணத்தால் கார்பன் டை ஆக்சைடு உடலின் உள்ளே இருந்து வெளியேற முடியாமல் போகிறது. சிஓபிடி-யால், இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களின் ஆபத்து மிகவும் அதிகரிக்கிறது. பெண்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிஓபிடியின் அறிகுறிகள் என்ன, அது எதனால் ஏற்படுகிறது, அதை எவ்வாறு அகற்றுவது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

COPD: சிஓபிடியின் அறிகுறிகள்

சிஓபிடி-யின் அறிகுறிகள் பொதுவாக மிகவும் தாமதமாகவே காணப்படும். சிஓபிடியின் மிக முக்கியமான அறிகுறி நீண்ட நேரம் இருமல் இருப்பது மற்றும் சளி சேருவது ஆகியவையாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர், நாள் முழுவதும் இருமல் பிரச்சனையுடன் தொடர்ந்து போராடுகிறார். 4 முதல் 8 வாரங்களுக்கு இருமல் தொந்தரவு இருந்தால், அது சிஓபிடியின் அறிகுறியாக இருக்கலாம். 

இந்த நோயில், எந்த காரணமும் இல்லாமல் எடை தானாகவே குறையத் தொடங்குகிறது. இது தவிர, நீங்கள் சுவாசிக்கும்போது அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது இறங்கும்போது சோர்வாக உணர்ந்தால், அதற்கு நுரையீரல் பலமற்று இருப்பது காரணமாக இருக்கலாம். சிபிஓடி இருந்தால், சளியின் நிறம் மஞ்சள் அல்லது பச்சை நிறமாக மாறும்.

சிஓபிடிக்குப் பிறகு இந்த நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது

- சிஓபிடி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சளி, காய்ச்சல் எளிதில் வரும். 

- இது தவிர, சிஓபிடி நோயாளிகளுக்கு இதய நோய்களின் ஆபத்து அதிக அளவில் அதிகரிக்கிறது. 

- சிஓபிடி நோயாளிகளில், இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களின் ஆபத்து மிகவும் அதிகரிக்கிறது.

சிஓபிடி: இந்த வழியில் பாதுகாத்துக்கொள்ளலாம்: 

இந்த நோயைத் தவிர்க்க, உங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, சிஓபிடி அதிகமாக புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நோயைத் தவிர்க்க, முதலில் நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். இது தவிர, சிஓபிடியைத் தடுக்க, நீங்கள் அதிக தூசி மற்றும் இரசாயனங்களின் தொடர்பில் வராமல் இருப்பது மிக அவசியமாகும். இந்த சிறிய விஷயங்களை கவனத்தில் கொண்டால், இந்த பெரிய நோயின் தொல்லைகளிலிருந்து எளிதாக உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். 


ALSO READ : பெண்களுக்கு தொடர்கதையாகும் 'முடி உதிர்வு' பிரச்சனை... காரணமும், தீர்வும்....


Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....