இனி பாதாம் தோலை தூக்கி எறியாதீங்க! முகத்துக்கும் முடிக்கும் இப்படி யூஸ் பண்ணுங்க போதும்....
பாதாம் ஒரு ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். இதில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுக்குமே அடங்கியுள்ளது.
இருப்பினும் பாதாமை தோல் உரித்து சாப்பிடுவது தான் நல்லது.
அதே நேரம் இந்த பாதாமின் தோலை பயன்படுத்தி எப்படி சருமத்தையும் கூந்தல் அழகையும் பாதுகாக்குகின்றது.
அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே பார்ப்போம்.
* முடியை வலுப்படுத்த வேண்டும் என்றால் பாதாம் தோலை முட்டை, தேன் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை கூந்தலில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு கூந்தலை மென்மையாக அலசி எடுக்கவும்.
* முகத்துக்கு பேக் போடும் போது பாதாம் தோலை சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்துக்கு ஊட்டமளிக்கும் சருமத்தை நீரிழப்பிலிருந்து தடுக்கும்.
* பாதாம் தோல்களை சேகரித்து வைத்துகொள்ளவும். கூந்தலை நன்றாக அழுக்கு நீங்க அலசிய பிறகு மறுநாள் எண்ணெய் வைக்காமல் பாதாம் தோலை அரைத்து கூந்தலில் குறிப்பாக உச்சந்தலையில் தடவி வந்தால் பேன் பிரச்சனை விரைவில் நீங்கும். கூந்தல் வறட்சி இருக்காது. முடி மென்மையாக மாறும்.
* பாதாம் தோலை இலேசாக நீர் விட்டு அரைத்து சரும பிரச்சனை இருக்கும் இடங்களில் அதாவது புண்கள், பருக்கள் இருக்கும் இடங்களில் தடவி வரவும். பாதாம் கொட்டைகளையும் ஒன்றிரண்டாக சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.


Comments
Post a Comment