உலகின் காஸ்டலி காய்கறி இது தான்... ஒரு கிலோவின் விலையை கேட்டால் ஆடி போவீங்க

 இந்த காய் மார்க்கெட்டில் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. இதற்கான டிமாண்ட் காரணமாக இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது.


நாளுக்கு நாள் ஏறி கொண்டே போகும் விலைவாசியில் நம்முடைய அத்தியாவசிய தேவையான உணவுகளை ஆரோக்கியமாக மாற்றும் காய்கறிகளும் அடக்கம். மிகவும் விலை மலிவாக விற்கப்படும் காய்கள் கூட சூழலை பொறுத்து ராக்கெட் வேகத்தில் உயர்வதை நாம் கண்கூடாக காண்கிறோம். உணவுகளுக்கு அடிப்படையான காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் வகையில் உயரும் போது நாம் அனைவரும் வருத்தப்படுகிறோம் இல்லையா.! அதே சமயம் எப்போதுமே விலையுயர்ந்த பழங்கள், காய்கறிகள் அல்லது விளைபொருட்கள் என்று வரும்போது அந்த பட்டியலில் குங்குமப்பூ, ஹிமாலயன் காளான் மற்றும் டிராகன் பழங்கள் உள்ளிட்ட சில தான் பொதுவாக உடனே நம் நினைவிற்கு வரும்.


ஆனால் மிகவும் காஸ்ட்லி என்று நாம் கருதும் குறிப்பிட்ட இந்த சில பொருட்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கான பன்மடங்கு விலையில் ஒரு காய் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.! Hop shoots என்னும் காய்கறி தான் உலகின் மிகவும் காஸ்டலி வெஜிடபிள் என குறிப்பிடப்படுகிறது. இதன் இமாலய விலையின் முன் நீங்கள் மிகவும் விலையுயர்ந்தது என்று நினைக்கும் பொருட்களின் விலை அனைத்தும் மலிவானதாக தோன்றும். என்ன, ஓவர் பில்டப்பா இருக்கே.. அப்படி என்ன கிலோ லட்சம் ரூபாய்கா? விலை போகிறது என்று நீங்கள் கேட்டால் அதற்கு பதில் ஆம் என்பது தான்.


1 கிலோ Hop shoots-ன் விலை கடந்த வருடம் சுமார் ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.85,000-ஆக இருக்கிறது. உலகின் மிக விலையுயர்ந்த காய்கறி என்று குறிப்பிடப்படும் hopshoots ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானது. மேலும் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற இந்த காய்கறியின் விலை 1 லட்சம் ரூபாய்க்கு ரூ.15,000 மட்டுமே குறைவாக விற்கப்பட்டு வருகிறது. மிகவும் காஸ்லியான இந்த காய்கறி பொதுவாக இந்தியாவில் பயிரிடப்படுவதில்லை. எனினும் இது முதலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய பண்ணையில் வளர்க்கப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.


இதனிடையே கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ் சிங் என்ற விவசாயி ரிஸ்க் எடுத்து Hop Shoots-ஐ காய்கறியை விளைவித்தார். இந்த Hopshoots காய்கறிகளை வளர்த்து அறுவடை செய்வது என்பது முதுகெலும்பை உடைக்கும் வேலையாக இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது இதை வளர்த்து அறுவடை செய்ய நிறைய கடினமான, உடல் உழைப்பு தேவை. இதன் காரணமாகவே இந்த காய்கறி இவ்வளவு விலையுயர்ந்ததாக இருக்கிறது என கூறப்படுகிறது.


அதே நேரம் இது மார்க்கெட்டில் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. இதற்கான டிமாண்ட் காரணமாக இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. எனவே 1 கிலோ Hopshoots வாங்கும் காசிற்கு ஒரு புதிய பைக்கை விலைக்கு வாங்கி விடலாம். Hopshoots-கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்க மற்றொரு முக்கிய காரணம் இதனை வளர்ப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் மிகுந்த கவனிப்பும், கவனமும் தேவை. ஏனென்றால் இவற்றை வளர்க்க மூன்று ஆண்டுகள் ஆகும்.


மேலும் அறுவடை செய்யும் வரை அதை தினமும் பராமரிக்க வேண்டும். இதை சாப்பிடுவதால் காசநோயில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், கவலை, தூக்கமின்மை, மன அழுத்தம், கவனக்குறைவு-அதிக செயல்பாட்டுக் கோளாறு (ADHD) போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த தாவரத்தில் இருக்கும் அமிலங்கள் புற்றுநோய் செல்களை கொல்லவும், லுகேமியா செல்களைத் தடுக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது.


இதன் அறிவியல் பெயர் Humulus lupulus. குறிப்பாக இந்த தாவரம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு சொந்தமானது. உலகில் மிகவும் மதிப்புமிக்க இந்த காய்கறி செடி சுமார் 6 மீட்டர் வரை வளரக்கூடியது. அதே போல் ஒரு செடியின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் hopshoots அதிகம் பயிரிடப்படாததால் விலை மிகவும் அதிகமாக உள்ள அதே நேரம் இமயமலையில் விளையும் Guchhi மஷ்ரூம் ஒரு கிலோ ரூ.30,000 வரை விலை போவது குறிப்பிடத்தக்கது.










Comments