உங்களுக்கு தலை அரிப்பு தாங்க முடியலையா? இதனை போக்க கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க....
நம்மில் பலருக்கு உச்சந்தலை அரிப்பு பிரச்சினை உண்டு. இதற்கு தலைமுடியில் வியர்வையும், எண்ணெய்யும் படிந்திருப்பதே அதற்கு காரணமாக இருக்கும்.
நமைச்சல் அதிகமாக இருந்தால் அழுக்கு படர்ந்துகொண்டிருப்பது, பேன் தொல்லை, ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. அதில் கற்றாழை பெரிதும் உதவுகின்றது. இதனை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
கற்றழை ஜெல் - 5 முதல் 6 டீஸ்பூன்
துளசி பொடி - 2 டீஸ்பூன்
செய்முறை
கற்றாழையுடன் துளசி பொடியை சேர்த்து நன்றாக குழைய கலந்துவிடவும்.
சில நிமிடங்கள் வரை இரண்டும் சேரும் வரை கலந்து விடவும். 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கூந்தலை சுத்தமாக அழுக்கு நீங்க அலசி உலர விடவும் பிறகு இந்த மாஸ்க்கை எடுத்து உச்சந்தலை முழுவதும் சிறிது சிறிதாக தடவி வரவும்.
முடியை பிரித்து உச்சந்தலை முழுவதும் தடவி 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.
பிறகு வெற்றுநீரில் நன்றாக அலசி எடுக்கவும். வாரம் ஒருநாள் இதை செய்து வந்தால் அரிப்பு நீங்க கூடும்.
பயன்
கற்றாழை சேர்ப்பதால் கூந்தல் பளபளப்பு இருக்கும்.
கூந்தலுக்கு மென்மையை அளிக்கும். கூந்தல் மிருதுவாக இருக்கும்.
கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
ALSO READ : முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னத்தை நீக்க சில ‘முக’ பயிற்சிகள்!

Comments
Post a Comment