வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பதை யாருக்கும் தெரியாமல் மறைப்பது எப்படி.?
Whatsapp Online Status | வாட்ஸ்அப் சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஹைடிங் அம்சம் குறித்து சோதனை செய்து வந்தது. தற்போது இந்த அம்சம் iOS, ஆண்ட்ராய்டு பிளாட்ஃபார்மில் உள்ள யூஸர்கள் அனைவருக்கும் கிடைக்கிறது.
உலக அளவில் பிரபலமான மெசெஜிங் ஆப்பான வாட்ஸ்அப் அதன் யூஸர்களின் தேவைகளுக்கு ஏற்றார் போல் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. குறிப்பாக யூஸ்ர்களின் பிரைவசியைப் பாதுகாப்பதற்காக பல்வேறு விதமான அப்டேட்களை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப், தற்போது ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கக்கூடிய புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது நாம் வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, மற்றவர்களும் சாட் (chat) பக்கத்தில் ‘Online’ என காண்பிக்கும். அதன் மூலம் நாம் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது பிறருக்கு தெரியும். தற்போது இந்த ‘ஆன்லைன் ஸ்டேட்டஸ்’ ஆப்ஷனை நிர்வகிக்கும் வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது.
வாட்ஸ்அப் சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஹைடிங் அம்சம் குறித்து சோதனை செய்து வந்தது. தற்போது இந்த அம்சம் iOS, ஆண்ட்ராய்டு பிளாட்ஃபார்மில் உள்ள யூஸர்கள் அனைவருக்கும் கிடைக்கிறது. நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் ஆன்லைன் ஸ்டேட்டஸை சக ஊழியர்கள் அல்லது தேவையில்லாமல் மெசெஜ் செய்து தொல்லை கொடுக்கும் நபர்களிடம் இருந்து சீக்ரெட்டாக ஹைட் (hide) செய்ய விரும்பினால் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பில் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஹைடிங்கை பயன்படுத்துவது எப்படி என பார்க்கலாம்...
1. ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் யூஸர்கள் முதலில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
2. அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும்.
3. வாட்ஸ்அப் செட்டிங் மெனுவிற்கு (Setting Menu) செல்லவும்.
4. அதில் அக்கவுண்ட்ஸ் செட்டிங்கிஸ் (Account Setting) என்பதை கிளிக் செய்யவும்
5. அதனை கீழ்பக்கமாக ஸ்க்ரால் செய்தால் பிரைவசி ஆப்ஷன் (Privacy option) என்பது காண்பிக்கப்படும். அதனை செலக்ட் செய்யவும்.
6. அதில் ‘Last seen and online’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
7. நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யாரெல்லாம் பார்க்க முடியும்? (who can see when I’m online) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
8. அதில் ‘Everyone’ மற்றும் ‘same as last seen’ என இரண்டு விதமான ஆப்ஷன்களில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யலாம்.
அதாவது ‘Everyone’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலமாக உங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை அனைவரும் பார்க்க முடியும். ‘same as last seen’ என்பதை தேர்வு செய்தால் உங்களின் last seen யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்று தேர்வு செய்து வைத்திருக்கிறீர்களோ அவர்கள் மட்டும் ‘ஆன்லைன் ஸ்டேட்டஸ்’ பார்க்க முடியும்.
இந்த ஆப்ஷனை ஆக்டிவேட் செய்ய உங்கள் வாட்ஸ்அப் last seen-யை செட் செய்ய வேண்டும். இதில் மொத்தம் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். முதலாவதாக 'Everyone' என்பதை தேர்வு செய்வதன் மூலமாக அனைவரும் உங்களுடைய last seen-யை பார்க்க முடியும், அடுத்ததாக 'Contacts' என்பதை கிளிக் செய்தால் தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமே காண முடியும். அதே சமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொடர்புகளை மட்டும் முடக்க ‘My contacts except' என்ற ஆப்ஷனையும், அனைவரையும் முடக்க 'No body' என்ற கடைசி ஆப்ஷனையும் தேர்வு செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் நிறுவனம் எப்போதுமே தனது யூஸர்களின் தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே தான் பிளாட்ஃபார்மில் உள்ள அனைத்து சாட்களும் என்ட்-டு-எண்ட் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளன. அதாவது செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் அதனை படிக்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் உறுதிப்பட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment