ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க.....
இன்றைய இளைய தலைமுறையினர் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்தற்கு ஜிம்மிற்கு செல்வதுடன், கடுமையான உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உடம்பை கட்டுக்காப்பாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சியுடன் உணவும் மிக முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே போன்று உடற்பயிற்சி செய்யும் போது, வாயுத் தொல்லையோ? வயிறு வீக்கமோ? இளைப்பாறுவதோ? இவ்வாறான நிலையினை நீங்கள் சந்தித்தால், உடற்பயிற்சிக்கு முன்பு நீங்கள் எடுத்துக்கொண்ட உணவு முறையே காரணமாகும்.
உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடக்கூடாத உணவுகள்
உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம்மிற்கு செல்வதற்கு 2 மணி நேரம் முன்பு நீங்கள் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. நார்ச்சத்து உணவுகள் மேலே கூறப்பட்ட இடையூறுகளை ஏற்படுத்தும்.
ஆளிவிதை, காய்கறி சாலட், வேக வைத்து சாப்பிடும் நார்ச்சத்து உணவுகள் என இவற்றினை தவிர்த்து விட வேண்டும்.
ALSO READ : காலை அல்லது மாலை... எந்த நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை விரைவில் குறையும்...........



Comments
Post a Comment