ஃப்ரீ ஸ்டோரேஜ் ஸ்பேஸை 15 GB-யிலிருந்து 1TB-யாக உயர்த்திய கூகுள் - ஆனால் இந்த யூஸர்களுக்கு மட்டுமே!
Google Workspace | "விரைவில் ஒவ்வொரு கூகுள் ஒர்க்ஸ்பேஸ் இன்டிவிஜுவல் அக்கவுண்டிற்கும் 1TB செக்யூர்ட் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
பயன்பாட்டின் அதிகரிப்புடன் தரவுகளின் அளவும் கூட தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் ஃபைல்கள், முக்கிய இ-மெயில்கள், வீடியோக்கள் மற்றும் ஃபோடோக்களை சேமித்து வைக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
டிஜிட்டல் டிவைஸ்கள் குறிப்பிட்ட அளவு ஸ்டோரேஜ்-உடன் மட்டுமே வருவதால் பல நேரங்களில் தாங்கள் பத்திரமாக சேமிக்க நினைக்கும் டேட்டாக்களுக்காக கூகுளின் ஸ்டோரேஜை நாடுகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட ஃபைல் டைப்களின் சப்போர்ட்டுடன் டேட்டாக்கள் மற்றும் டாக்குமென்ட்ஸ்களை பத்திரமாக சேமிக்க கூகுள் டிரைவ் ஒரு பாதுகாப்பான கிளவுட் ஸ்டோரேஜ் ஆகும்.
இமேஜ்கள், PDF-கள், PSD மற்றும் CAD ஃபைல்கள் மற்றும் பலவற்றை எந்த கவலையும் இல்லாமல் சேமிக்கலாம். மேலும் கூகுள் டிரைவானது மால்வேர், ஸ்பேம் மற்றும் ரான்சம்வேர் ஆகியவற்றிற்கு எதிராக பில்ட்-இந்த ப்ரொட்டக்ஷனுடன் வருகிறது. எனவே மால்வேர்ஸ் பற்றி யூஸர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆனால் நீங்கள் எப்போதாவது சில முக்கியமான ஃபைல்ஸ் அல்லது டேட்டாவை சேமிக்கவிருக்கும் போது, எரிச்சலூட்டும் வகையில் Google Drive-ல் "ஸ்டோரேஜ் ஃபுல்" என்ற எரர் மெசேஜை பெற்றுள்ளீர்களா..? ஆனால், இனி இந்த சிக்கல் பல யூஸர்களுக்கு இருக்காது. கூகுள் நிறுவனமும் கூட 15GB ஸ்டோரேஜ் ஸ்பேஸை தான் யூஸர்களுக்கு கொடுத்து வந்தது. ஆனால் இப்போது இந்த ஸ்டோரேஜ் லிமிட்டை ஒர்க்ஸ்பேஸ் இன்டிவிஜுவல் யூஸர்களுக்கு (Workspace individual users) உயர்த்தி இருக்கிறது. அதுவும் மிகப்பெரிய அளவில்..
ஆம், வொர்க்ஸ்பேஸ் இன்டிவிஜுவல் இப்போது அதன் அதிகரித்த ஸ்டோரேஜுடன் இன்னும் கொஞ்சம் அணுகுவதற்கு எளிமையாக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கூகுள் தனது Workspace Individual திட்டத்தை கடந்த ஆண்டு அனைவருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்தது. இந்நிலையில் தற்போது "ஒர்க்ஸ்பேஸ்ஸ்பேஸ் இன்டிவிஜுவல்" யூஸர்கள் இப்போது புதிய அப்டேட்டை பெறுகின்றனர். இதற்கு முன் 15GB வரை மட்டுமே இருந்த இலவச ஸ்டோரேஜ் வசதி இப்போது 1TB-யாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. 15GB-க்கு மேலான ஸ்டோரேஜை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று இருந்த நிலை, வொர்க்ஸ்பேஸ் இன்டிவிஜுவல் யூஸர்ககள் தற்போது 1TB வரையிலான ஸ்டோரேஜை கட்டணமின்றி இலவசமாக பெறலாம்.
இது தொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விரைவில் ஒவ்வொரு கூகுள் ஒர்க்ஸ்பேஸ் இன்டிவிஜுவல் அக்கவுண்டிற்கும் 1TB செக்யூர்ட் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இந்த அப்கிரேட் செய்யப்பட்ட ஸ்டோரேஜை பெறுவதற்கு ஒர்க்ஸ்பேஸ் இன்டிவிஜுவல் யூஸர்கள் எதுவும் வேண்டியதில்லை.
நாங்கள் இந்த அம்சத்தை வெளியிடும் போது, கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி ஒவ்வொரு ஒர்க்ஸ்பேஸ் இன்டிவிஜுவல் யூஸர்களுக்கும் ஏற்கனவே உள்ள 15GB ஸ்டோரேஜ் ஆட்டோமேட்டிக்காக 1TB-க்கு அப்கிரேட்டாகி விடும்" என கூறி இருக்கிறது. 15GB-யிலிருந்து 1TB-யாக உயர்த்தப்பட்டுள்ள இந்த புதிய ஸ்டோரேஜை பெற உங்களிடம் Google Workspace அக்கவுண்ட் இருக்க வேண்டும். அதாவது இந்த சலுகை Workspace யூஸர்களுக்கு மட்டுமே ஃப்ரீ யூஸர்களுக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Comments
Post a Comment