Brain Boosters : மூளை ‘ராக்கெட்’ வேகத்தில் இயங்க காலை உணவில் சேர்க்க வேண்டியவை!

 உங்கள் மூளை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கவும், மூளையை கூர்மையாக்கவும்  காலை உணவில்  சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். 


  • மனதை ஒருமுகப்படுத்த, உடற்பயிற்சி யோகா போன்ற விஷயங்களில் பலர் ஈடுபடுகின்றனர்.
  • சாப்பிடும் உணவிற்கும் மூளையின் செயல்பட்டிற்கும் நேரடி சம்பந்தம் உண்டு எனலாம்.
  • எந்த வேலையையும் செய்ய உங்கள் உடலுக்கு கட்டளை கொடுப்பது உங்கள் மூளைதான்.


துரித கதியில் இயங்கும் இந்த வாழ்க்கையில், உடல் ஆரோக்கியமாக, பிட் ஆக இருக்க வேண்டும் என்பது போலவே  மூளையும் மனமும் பிட் ஆக இருப்பதும் மிகவும் முக்கியம். ஏனென்றால் எந்த வேலையையும் செய்ய உங்கள் உடலுக்கு கட்டளை கொடுப்பது உங்கள் மூளைதான். மூளையையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலும் ஃபிட்டாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்த, உடற்பயிற்சி யோகா போன்ற விஷயங்களில் பலர் ஈடுபடுகின்றனர்.  ஆனால் அவர்கள் தங்கள் உணவுகளில் கவனம் செலுத்துவதில்லை.  நீங்கள் சாப்பிடும் உணவிற்கும் மூளையின் செயல்பட்டிற்கும் நேரடி சம்பந்தம் உண்டு எனலாம். 

நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், உங்கள் மூளை பலவீனமாகிவிடும். ஆனால், சிறந்த டயட்டை பின்பற்றினால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கும். எனவே காலை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் எவை என்று அறிந்து கொள்ளலாம்.

காலையில் குடிக்கும் காபி 

காலை உணவில் காபியை நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். காபியில் நிறைய காஃபின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுமட்டுமின்றி, மூளை சுறுசுறுப்பாக இயங்கி, விழிப்புணர்வை அதிகரித்து, சிறப்பான வகையில் கவனம் செலுத்த முடிகிறது.

மஞ்சளை சேர்க்கப்பட்ட உணவு

மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். நோய்களை விரட்டுவதில் மட்டுமல்ல மூளையையும் மனதையும் கூர்மையாகுவதிலும் சிறந்தது. இது மூளை செல்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், மஞ்சளை உட்கொள்வதால் நினைவாற்றல் கூடும். இதை உங்கள் காலை உணவிலும் மஞ்சள் சேர்க்கப்பட்ட உணவு அவசியம் இருக்கட்டும்.

காலை உணவில் தினமும் முட்டை 

முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் பி-6 மற்றும் பி-12 உள்ளது. காலை உணவாக முட்டை சாப்பிடுவது உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. முட்டை உணவை காலையில்  உண்பதால், மூளை சிறப்பாக செயல்படும்.

ஆரஞ்சு பழம் 

உங்கள் உணவில் ஆரஞ்சுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடலாம். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி என்பது மூளை செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கும் ஒரு ஊட்டச்சத்து ஆகும்.

வாதுமை பருப்பு மற்றும் பாதாம் பருப்பு

வாதுமை பருப்பு மற்றும் பாதாம் பருப்பு போன்றவை மூளையின் ஆற்றலை அதிகரிக்கும். அவை மூளையை சேதப்படுத்தும் செல்களை எதிர்க்கும் திறன் பெற்றவை. மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. மேலும் ப்ரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் மூளையையும் மனதையும் கூர்மையாக்கும்.


ALSO READ : ஆரோக்கியத்தை பாதிக்கும் உறங்கும் முறைகள் ....


Comments