வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்...
இன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வது தான். முடி உதிர்தல் கூட எல்லோருக்கும் உதிர்வது போல் இருந்தால் அது சாதாரண பிரச்சனை தான்.
அதுவே, வழுக்கை தலை வரை சென்றால், அவர்களால் நிம்மதியாக தூங்க கூட முடியாது இதற்காக அவசர அவசரமாக கண்ட விளம்பரங்களை பார்த்து செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்.
உண்மையில் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதனை ஒரு சில எண்ணெய்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
1. தலைக்கு குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு 2-3 தேக்கரண்டி விளக்கெண்ணெயை கொண்டு அடிக்கடி மசாஜ் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடியின் வேர்களைத் தூண்டி முடி உதிர்தலை குறைக்கிறது. வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும். குறிப்பாக வழுக்கை விழும் இடங்களில் எண்ணெய் அதிகம் தேய்க்க வேண்டும்.
2. 2-3 டேபிள் ஸ்பூன் தேங்காயெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி அதை தலையில் மசாஜ் செய்து வரலாம். 4-5 மணி நேரம் கழித்து கூந்தலை அலசி விடுங்கள். இரவு முழுவதும் வைத்து இருந்து காலையில் அலசலாம். வாரத்திற்கு 2-3 முறை செய்யவும்
3. புதினா எண்ணெயை உங்கள் தலையில் தடவி பிறகு சூடான துண்டு கொண்டு கவர் செய்து கொள்ளுங்கள். பிறகு லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
4. ஆலிவ் எண்ணெய் மற்றும் பூசணி விதை இந்த எண்ணெயை கலந்து தலையில் தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்து இருங்கள். மறுநாள் தலைக்கு குளித்துவிடுங்கள். வாரத்திற்கு 2 முறை இதைச் செய்து வாருங்கள். பலன் கிடைக்கும்.
5. 3 -4 கற்பூரத்தை பொடித்து ( அளவாக சேருங்கள்) 100 மி. லி தேங்காயெண்ணெயில் கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து கொள்ளுங்கள். படுக்கைக்கு போகும் முன்பு இதை வழுக்கை இருக்கும் இடத்தில் அப்ளை செய்து வரலாம். ஒவ்வொரு இரவும் இந்த எண்ணெயை பயன்படுத்தி வாருங்கள்.
6. 2-3 டீஸ்பூன் தாராமிரா எண்ணெய் அருகுலாவின் விதைகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இதன் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து 2-3 மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள். வாரத்திற்கு 2 முறை செய்து வர வேண்டும்.
7 . ஆலிவ் எண்ணெயை சூடாக்கி சில விநாடிகள் அப்ளை செய்து விட வேண்டும். 4-5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். வாரத்திற்கு 3 முறை இதைச் செய்து வாருங்கள். ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பினாலிக் கலவை விலங்கு ஆய்வுகளில் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இது மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது.
ALSO READ : முகப்பரு இல்லாத முகம் வேண்டுமா? அப்போ இந்த இலையை இப்படி பயன்படுத்துங்க...

Comments
Post a Comment