இரவு தூங்கும் முன் இப்படி செய்தால் நிம்மதியான உடனடி தூக்கம் கிடைக்கும்! எளிய வீடியோ விளக்கம்...

 இரவில் படுக்கையில் படுத்தவுடன் நிம்மதியாக தூங்குவது ஒரு வரம் தான்..

ஆனால் அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை, பலரும் நள்ளிரவு வரை புரண்டு படுப்பார்கள், அவர்களுக்கு மெதுவாக தான் தூக்கம் வரும்.

இனி அந்த கவலை வேண்டாம்... உங்களின் இந்த பிரச்சனையை போக்க யோகா நிபுணர் ஜூஹி கபூர் சில ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார்.

ஜூஹி கபூர் இரவு நல்ல தூக்கத்தை பெற பட்டாம்பூச்சி யோகா நிலையை பரிந்துரைக்கிரார். இந்த நிலையில் உங்கள் கால்களை பட்டாம்பூச்சி நிலையில் வைக்கும்போது உடல் வலி, உடல் அழுத்தம் நீங்கி லேசாக உணர வைக்கிறது. அதோடு அலைப்பாயும் மனதை சாந்தப்படுத்தி ஒருநிலைப்படுத்துகிறது. இதனால் சீக்கிரமே உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும் என்கிறார்.

எப்படி செய்வது?

முதலில் நிமிர்ந்தவாறு நேராக அமருங்கள். பின் இரு கால் பாதங்களை ஒன்றாக இணைத்து கால்களை விரித்தவாறு அமருங்கள்.

பின் கால் பாதங்களுக்கு வாசனை எண்ணெய் தேய்த்து நன்கு மசாஜ் செய்யுங்கள்.

கால் பாதங்களை நன்கு அழுத்தி மசாஜ் செய்ய மனம் ஒருநிலைப்படுவதை உணர்வீர்கள்.

இந்த மசாஜை தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு செய்யுங்கள்.

இப்படி செய்து விட்டு தூங்கினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். 



ALSO READ : முடியை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தி பாருங்க...


Comments

Popular posts from this blog

வாய்ப்புண்ணால் ரொம்ப அவஸ்தையா? இதனை தடுக்க சில பாட்டி வைத்தியம்! இதோ உங்களுக்காக.....

கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் வழிகள் ....

வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!