பறக்கும் விமானத்திலிருந்து கழன்று விழுந்த டயர்; பதைபதைக்க வைக்கும் வீடியோ - எங்கே?

 விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே, விமானத்தின் தரையிறங்கும் பகுதியிலிருந்து கரும்புகை வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து தரையிறங்கும் பகுதியிலிருந்து ராட்சத பந்துபோல ஒன்று கீழே விழுந்தது தெரியவந்தது.

இத்தாலியிலிருந்து புறப்பட்ட போயிங் விமானத்தின் டயர் கழன்று கீழே விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போயிங் 747 ட்ரீம்லிஃப்டர் விமானம், சரக்குகளை எடுத்து செல்வதற்காக பயன்படுத்தப்படும் விமானம் ஆகும். இது இத்தாலியின் டொரன்டோவிலிருந்து அமெரிக்காவின் சார்லஸ்டன் விமான நிலையத்திற்கு செல்லவிருந்தது.

விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே, விமானத்தின் தரையிறங்கும் பகுதியிலிருந்து கரும்புகை வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து தரையிறங்கும் பகுதியிலிருந்து ராட்சத பந்துபோல ஒன்று கீழே விழுந்தது தெரியவந்தது.

பின்னர் அது விமானத்தின் ஒரு சக்கரம் எனக் கண்டறியப்பட்டது. எனினும், விமானத்தை நிறுத்தாமல், அந்த பயணம் மேற்கொள்ளப்பட்டு, 11 மணி நேரத்திற்கு பிறகு சார்ல்ஸ்டனில் தரையிறக்கப்பட்டது. யாருக்கும் எந்த வித சேதமோ ஆபத்தோ நேரவில்லை.

எதனால் விமானத்தின் சக்கரம் கழன்றது என இதுவரை தெரியவில்லை. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ALSO READ : Jodie Comer : உலகிலேயே அழகான பெண்மணி இவர்தான்! அறிவியல் பூர்வமாக கண்டறிந்தது எப்படி?

Comments