உங்களுக்கு கால்,கை முட்டிகளில் மட்டும் கறுப்பா இருக்கா ? இதனை போக்க சில வழிகள் இதோ...
பொதுவாக நம்மில் சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும்.
நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாறவில்லை என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சில எளிய தீர்வு உள்ளது. தற்போது அவற்றை பார்ப்போம்.
எலுமிச்சை சாறுடன் பாலாடை, வெள்ளரிக்காய் சாறு அல்லது மஞ்சள்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து ஊறவிட்டு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள், வினிகர் கலந்து கணுக்கால் பகுதியில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவிட்டு பின்னர் எலுமிச்சையால் தேய்த்து கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒருமாதத்திற்கு தொடர்ந்து இதனை செய்யவேண்டும்.
மூன்று கரண்டி தயிருடன் சில துளிகள் வினிகர் சேர்த்து கலந்து கால் முட்டியில் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து ஊறவிட்டு இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
கடலைமா இரு கரண்டி, மஞ்சள் தூள் சிறிதளவு, பால் இரு கரண்டி என்பவற்றை பசை போல கலக்கவும். இதனை முட்டிப் பகுதிகளில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ கருமை மறையும். வறண்ட தோல் மென்மையாகும்.
பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் நன்றாக அரைத்து கை, கால் முட்டிப் பகுதிகளில் தேய்க்கவும். கருமை மறையும்.
பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும். அந்த கருமையான பகுதிகளில் இந்த விழுதை தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, பிறகு குளிக்கவும். இப்படியே செய்து வந்தால் கருமை மறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
ALSO READ : உடல்நிலை சரி இல்லை என்றதும் இன்டர்நெட்டை நோக்கி ஓடுகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்....


Comments
Post a Comment