எடையை குறைக்க காலையில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் தெரியுமா?

 பொதுவாக எடையைக் குறைக்க நினைக்கும்போது குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளாகத் தேர்வு செய்வது மிக நல்லது.

அதிலும் காலை வேளையில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிக முக்கியம். அதிக நார்ச்சத்துக்களும் எல்லா வித ஊட்டச்சத்துக்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

காலை வேளைகளில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம். 


* காலை நேர உணவாக முட்டையை எடுத்துக் கொள்வது நல்லது.இது நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வைத் தருவதோடு பசியைக் கட்டுப்படுத்தவும் செய்யும். இதனால் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்ளாமல கட்டுப்படுத்த முடியும். 

 * வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் நார்ச்சத்தும் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். ஒரு மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் 100 கலோரிகளும் 3 கிராம் அளவுக்கு நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இதை காலை உணவாக எடுத்துக் கொள்ளும்போது மதியம் வரை பசியைக் கட்டுப்படுத்த முடியும்.

* காலை உணவில் ஒரு கப் யோகர்ட் எடுத்துக் கொள்வதன் மூலம் 100 கலோரிகள் பெற முடியும். அதோடு போதிய அளவு புரதச்சத்தும் ஆரோக்கியமான கொழுப்பும் கிடைக்கும். இது உடல் எடையைக் குறைக்க உதவும். 

* ஸ்மூத்தியில் காய்கறிகள் அல்லது பழங்கள், பால் ஆகியவற்றைச் சேர்ப்பதால் வைட்டமின்களும் புரதங்களும் அதிகமாக இருக்கும். இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் எனர்ஜியையும் கொடுக்கும்.

 * தினமும் ஒரு கைப்பிடி அளவு பெர்ரி வகைகளை எடுத்துக் கொண்டால் போதும் உடல் எடையைக் குறைக்கச் செய்யும். பெர்ரி வகைகளுடன் ஓட்ஸ், யோகர்ட் ஆகியவற்றைச் சேர்த்து ஸ்மூத்தியாகவோ சாலட் வடிவிலோ எடுத்துக் கொள்ளுங்கள்.

* தொடர்ந்து 12 வாரங்கள் உங்களுடைய டயட்டில் காலை உணவில் கிரேப் ஃப்ரூட்டை சேர்த்துக் கொள்ளும்போது அது உடல் எடையில் கிட்டதட்ட 4 கிலோ வரை குறைவதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

 * காபியில் உள்ள கஃபைன் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை எரிக்க உதவும். குறிப்பாக காலை உணவில் சர்க்கரை சேர்க்காத பிளாக் காபியை எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

*  கிவி பழத்தில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு பசியைக் கட்டுப்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் கொலஸ்டிராலைக் குறைக்கவும் உதவுகிறது.

*  க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்வதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும் எரிக்கச் செய்கிறது. எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் க்ரீன் டீ குடிப்பது நல்லது. ஆனால் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.





Comments