சத்தமாக குறட்டை விட்டு தூங்கினால் நன்றாக தூங்கியதாக அர்த்தமா..?

 24 மணி நேரம் ஒருநாள் என்னும் நிலையில், சராசரியாக நாளொன்றுக்கு 8 மணி நேரம் தூங்க பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. வாழ்நாள் முழுமைக்கும் என்று கணக்கிட்டாலும் மூன்றில் ஒரு பங்கு ஓய்வு ஆழ்ந்து தூக்கம் இருக்க வேண்டும்.


எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி பேதமின்றி ஏங்கும் ஒரு விஷயம் தூக்கம். இன்றைய காலகட்டத்தில் நிம்மதியான தூக்கம் என்பது பலருக்கும் வாய்ப்பதில்லை. எந்த வயதினர்கா இருந்தாலும் உடல் உறுப்புகள் சீராக செயல்பட மற்றும் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் மிகவும் அவசியம்.

உடலையும், மனதையும் பலப்படுத்தி ஆற்றல் தருவது தூக்கம். எனினும் மோசமான தூக்க பழக்கத்தால் பலரும் உடல் பருமன், அதீத சோர்வு, தெளிவற்ற சிந்தனை உட்பட பல சிக்கல்களை அனுபவிக்கின்றனர். அதே போல உலகை ஆட்டி வைத்து வரும் பெருந்தொற்று தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் தாக்கியதை பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தூக்கத்தினால் கிடைக்கும் நன்மைகளை பெறுவதற்கு உண்மையில் தினமும் நாம் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது பலரின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது. 24 மணி நேரம் ஒருநாள் என்னும் நிலையில், சராசரியாக நாளொன்றுக்கு 8 மணி நேரம் தூங்க பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. வாழ்நாள் முழுமைக்கும் என்று கணக்கிட்டாலும் மூன்றில் ஒரு பங்கு ஓய்வு ஆழ்ந்து தூக்கம் இருக்க வேண்டும்.

இதனிடையே தூக்கம் பற்றி பேசி இருக்கும் பிரபல டாக்டர் அர்ஜுன் கண்ணா, நம்மில் பலர் தூக்கம் முக்கியம் என்பதை மறந்து விடுகிறோம். ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர் தொடர்ந்து சரியாக தூங்காமல் இருந்திருக்கலாம். தூக்கம் சரியில்லை என்றால் ஒருவர் எளிதில் எரிச்சல் மற்றும் கோபம் கொள்வார்கள், காலை எழும்போதே தலைவலி, சோர்வுடன் இருப்பார்கள். ஒருகட்டத்தில் தூக்கம் சீர்குலைவது மனச்சோர்வு, பதற்றம், ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மூளை சார்ந்த நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்.


தூக்கத்தின் தரம் குறைவதற்கான ஆரம்ப அறிகுறிகள்:

மூச்சுக்குழாய் மற்றும் சுவாச மருத்துவத்தில் பிரபலமாக இருக்கும் மருத்துவர் நெவின் கிஷோர் கூறுகையில், இரவு சரியாக தூங்கவில்லை என்றால் காலை ஃபிரெஷ்ஷாக இருக்க முடியாது. சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய காலை அல்லது அலுவலக நேரத்தில் தூக்க கலக்கமாக இருக்கும். அப்போது தூக்கத்தை கட்டுப்படுத்த சிரமமாக இருக்கும். காலை நேர தலைவலி, நினைவாற்றல் இழப்பு, வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பது, திடீரென உடல் எடை அதிகரிப்பது உள்ளிட்டவை இரவில் ஒருவர் நன்றாக தூங்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்கிறார்.

பகல் அல்லது மதியம் தூங்கலாமா?

இரவில் 7 - 8 மணிநேரம் தொடர்ச்சியாக நன்றாக தூங்க முடியாத சிலர் பகல் அல்லது மதியத்தில் தூங்கி அதை ஈடுகட்ட நினைக்கிறார்கள். ஆனால் இது தவறான பழக்கம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆரோக்கியமாக இருப்பவர்கள் தினமும் இரவில் 7 - 8 மணி நேரம் தூங்க வேண்டும். அப்படி முடியாவிட்டால் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம். அதனை கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். மத்திய நேர தூக்கம் இரவு நேர தூக்கத்தின் தரத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இரவில் தூங்க முடியாவிட்டால் கூட தூங்கத்தை கட்டுப்படுத்தி மீண்டும் அடுத்த இரவில் தூங்க முயற்சிக்கலாம். அப்படியே மதியத்தில் தூங்க வேண்டும் என்றாலும் 20 நிமிடங்களுக்கு மேல் தூங்க கூடாது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.


குறட்டை விட்டால் அது நல்ல தூக்கமா?

பலர் குறட்டை விட்டு தூங்கினால் நன்றாக தூங்கி எழுந்துள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால் இது தவறு, ஏனென்றால் சத்தமாக குறட்டை விடுவது மோசமான தூக்கத்தின் மற்றொரு அறிகுறி. இரவில் மேல் சுவாசப்பாதை மூடுவதால் தான் குறட்டை சத்தம் ஏற்படுகிறது. எனவே ஒருவர் குறட்டை விட்டு தூங்கினால் அவர் சரியாக தூங்கவில்லை என்று தான் அர்த்தம். ஏனென்றால் குறட்டை விடும்போது உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போல ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல், இரவு நேரத்தில் குறைந்த அளவு ஆக்ஸிஜன், மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தலாம். எனவே ஒருவர் சத்தமாக குறட்டை விடுவது, மோசமான தூக்கம் மற்றும் பகல்நேர தூக்க கலக்கம் பற்றி அறிந்திருக்க வேண்டும்.


சிறந்த தூக்கத்திற்கு...

- தூங்குவதற்கு நிலையான நேரத்தை பின்பற்றுவது, படுப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன் மொபைல் அல்லது டிவி உள்ளிட்ட டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

- முக்கியமாக பகல் அல்லது மதிய நேர தூக்கத்தை தவிர்க்க வேண்டும்

- இரவு சாப்பிட்டு விட்டு 15 நிமிடம் மிதமான வாக்கிங் செல்லலாம்

- இரவு உணவு ஹெவியாக இருக்க கூடாது

- மாலை 7 மணிக்கு பிறகு டீ, காபியை தவிர்த்து விடுங்கள்

- தூங்க செல்லும் முன் மனதிற்கு இதமான இசை அல்லது பாடல்களை கேட்கலாம்



Comments

Popular posts from this blog

டீ, காபியில் பட்டர் போட்டு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலைகீழாய் தொங்கிய படி பியானோ வாசிக்கும் இளம்பெண்! மெய்சீர்க்க வைக்கும் காட்சி...

ருசியான நாவூறும் நண்டு குருமா செய்வது எப்படி? இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்....