தீபாவளி ஸ்பெஷல்: கேழ்வரகு அதிரசம் ....
கேழ்வரகில் அதிகளவு கால்சியம் உள்ளது. இந்த தீபாவளிக்கு வித்தியாசமான, சத்தான இந்த பலகாரத்தை செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 500 கிராம்
வெல்லம் - 250 கிராம்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க
செய்முறை :
வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அந்த மாவில் பாகு காய்ச்சிய வெல்லத்தை ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். அதை ஒரு நாள் ஊற விட்டு, மறுநாள் மாவை அதிசரமாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த அதிசரங்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுககவும்.
இப்போது மிருதுவான, சுவையான கேழ்வரகு அதிரசம் தயார்.

Comments
Post a Comment