உலகளவில் பார்வையாளர்களை ஈர்த்த இடங்கள் .....

 உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், உலகம் முழுவதும் இருந்து பார்வையிடப்படும் இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

வருடாரந்திர பார்வையாளர்கள் பற்றிய கணக்கெடுப்பில் 65 லட்சத்து 32 ஆயிரத்து 336 (6.5 மில்லியன்) பேர் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். கூகுள் இணைய தள தேடல்கள் ஆண்டுதோறும் 23 மில்லியனைக் கடக்கின்றன. மேலும் இந்த நினைவுச்சின்னம் ஆண்டுக்கு 55 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

 நயாகரா நீர்வீழ்ச்சி, கனடா

 உலகளவில் மிகவும் விரும்பப்படும் அடையாளங்களின் பட்டியலில் முதல் இடத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி உள்ளது. கனடா மற்றும் அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சி ஆண்டுதோறும் 11.7 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது. வருடாந்திர கூகுள் தேடல் எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சத்தை கடக்கிறது

. தி கிராண்ட் கேன்யன், அமெரிக்கா

 இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச பிரியர்களை ஈர்க்கும் இடமாக அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கிராண்ட் கேன்யன் உள்ளது. உலக அளவில் விரும்பி பார்வையிடப்படும் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள இந்த சிவப்பு பாறை அடுக்குகள் 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது. ஆண்டுதோறும் 6.2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

தி கோல்டன் கேட் பாலம், அமெரிக்கா

 அமெரிக்காவில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலம் உலகளவில் பார்வையாளர்களால் ஈர்க்கப்படும் நான்காவது அடையாளமாகும். உலகளவில் மிகவும் பிரபலமான பாலங்களில் ஒன்றான இது 15 மில்லியன் வருடாந்திர பார்வையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது. மேலும் 6 மில்லியனுக்கும் அதிகமான கூகுள் தேடல்களை கொண்டுள்ளது.

 லிபர்ட்டி, அமெரிக்கா 

நியூயார்க் நகரத்தில் அமைந்திருக்கும் லிபர்ட்டி சிலை, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. இதனை பார்வையிடுவதற்கு அனுமதி இலவசம். இது ஒவ்வொரு ஆண்டும் 4.2 மில்லியன் பார்வையாளர்களையும், 12.5 மில்லியனுக்கும் அதிகமான கூகுள் தேடல்களையும் கொண்டுள்ளது.

 இவை தவிர உலகம் முழுவதும் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களின் பட்டியலில் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஓபரா ஹவுஸ், அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போன்றவையும் இடம்பிடித்துள்ளன.


ALSO READ : மின்னஞ்சல்களை மொத்தமாக அழிப்பது எப்படி? - இதை செய்யுங்கள்...


Comments