சளி பிரச்சினையை விரட்டியடிக்கும் மிளகு கசாயம் செய்வது எப்படி?
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி பிரச்சினை காணப்படும் இது காலபோக்கில் சலதோஷம், இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற நோய் நிலைமைகளை உருவாக்கும்.
அந்த வகையில் சளி பிரச்சினைகளை சரிச் செய்யகூடிய பானமொன்று தயாரிப்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு மிளகு - 1/4 கப்
- துளசி : 10 எண்ணிக்கை
- பனை வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
தயாரிப்பு முறை
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு மிளகை போட்டு வெடிக்கும் வரை நன்றாக வறுத்து மிக்ஸியில் பொட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள்.
பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
உடைத்த மிளகு அதனுடன் துளசி, பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்துங்கள்.
பிறகு ஒரு வடிகட்டியைக் கொண்டு கஷாயத்தை வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சீரணமின்மை, இருமல் மற்றும் சலதோஷம் அறிகுறிகள் குறையும்.
குறிப்பு - இதனை வாரத்திற்கு 3 அல்லது 4 தடவைகள் குடித்து வந்தால் சளி பிரச்சினைகள் நீங்கும்.
Comments
Post a Comment