நாம் தினந்தோறும் அருந்த வேண்டிய மூன்று வகையான ஜூஸ் வகைகள் : என்னென்ன பலன் கிடைக்கும்.?
Health Benefits of Juice | நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். கீரை சமைக்க நேரமில்லை என்பவர்கள், பழங்களாக சாப்பிட பிடிக்கவில்லை என்பவர்கள் தினசரி ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால், நம் கட்டுப்பாட்டை மீறி அல்லது தவிர்க்க முடியாத சூழலில் துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறோம். இதனால் உடல் பருமன் அதிகரித்து, நமக்கு தேவையற்ற தொந்தரவுகள் அதிகரிக்கின்றன.
குறிப்பாக, துரித உணவு சாப்பிடுவதாலும், மோசமான வாழ்வியல் பழக்கங்களாலும் மலச்சிக்கல் பிரச்சினையால் பலரும் அவதி அடைகின்றனர். இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்றால் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்.
இத்துடன், நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். கீரை சமைக்க நேரமில்லை என்பவர்கள், பழங்களாக சாப்பிட பிடிக்கவில்லை என்பவர்கள் தினசரி ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.
துளசி ஜூஸ்: இந்திய பாரம்பரியத்தில் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் கொண்டது துளசி. ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் துளசிச் செடிகள் இருக்கக் கூடும். துளசியில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவது பச்சை துளசி, இரண்டாவது கருந்துளசி ஆகும். பச்சை துளசியைக் காட்டிலும் கருந்துளசியில் நன்மைகள் அதிகமாம். ஆஸ்துமா, இருமல், சைனஸ், அசிடிட்டி, மலச்சிக்கல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரக் கூடியதாக கருந்துளசி இருக்கிறது. ஆகவே, தினசரி இந்த ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.
தர்பூசணி ஜூஸ்: எளிய மக்களும் வாங்கி சாப்பிடக் கூடிய பழங்களில் ஒன்று தர்பூசணி. ரோட்டோரக் கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும். இதில் உள்ள நீர்ச்சத்து கோடைகாலத்தில் நம்மை உடல் உஷ்ணத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது. லேசான இனிப்புச் சுவை கொண்டிருப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. தர்பூசணியில் பொட்டாசியம் சத்து இருக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தம் குறைய உதவியாக உள்ளது.
கேரட் ஜூஸ்: இனிப்புச் சுவை கொண்டது கேரட். இதன் நிறமே குழந்தைகளின் மனதை ஈர்க்கும். ஆகவே, கேரட் ஜூஸ் கண்டிப்பாக பிடிக்காமல் போகாது. கேரட்டில் கால்சியம், விட்டமின் ஏ, சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகளும், குறிப்பிட்ட அளவு விட்டமின்கள் பி, சி, டி, இ மற்றும் கே போன்ற சத்துகளும் இருக்கின்றன. உடலில் உள்ள கட்டிகளை எதிர்த்து இது போராடும். பசியை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்த சுத்திகரிப்புக்கு உதவியாக இருக்கும். சரும பாதுகாப்புக்கு கேரட் சாப்பிடுவது பயனுள்ளதாக அமையும்.
Comments
Post a Comment