Posts

Showing posts from January, 2023

சத்தான டிபன் ஓட்ஸ் கிச்சடி.....

Image
 ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவும். ஓட்ஸில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். தேவையான பொருட்கள்  ஓட்ஸ் - 1/2 கப்  பாசி பருப்பு - 1/2 கப்  வெங்காயம் - 1  இஞ்சி - 1 பச்சை மிளகாய் - 2  கேரட் - 1  பீன்ஸ் - 10  பச்சை பட்டாணி - 1/4 கப்  பெருங்காய தூள் - சிறிதளவு  மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி  மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி  உப்பு, கொத்தமல்லி இலை - தேவையான அளவு  நெய் - 2 தேக்கரண்டி  பட்டை - 1துண்டு  சீரகம் - 1 தேக்கரண்டி  தண்ணீர் - 3 கப்   செய்முறை வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  பாசி பருப்பை அரை மணிநேரம் ஊறவைக்கவும் கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, சீரகம் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.  அடுத்து கேரட், பீன்ஸ், பட்டாணி, பெருங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.  காய்கறிகள் வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.  அடுத்து அதில் ஊறவைத்த பருப்பு, ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.  உப்பு சரிபார்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும்.  இறுதியாக கொத்தமல்லி

வாரம் ஒருமுறை ஆப்பிள் பேஸ் பேக் போடுங்க...அப்புறம் பாருங்க மாற்றத்தை....

Image
 ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. பிம்பிள் தழும்பு, கரும்புள்ளிகளை குறைக்கும். ஆப்பிளில் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஆப்பிள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து புத்துயிர் அளிக்கவும் செய்யும். ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளில் உள்ள காப்பர், சருமத்தைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சருமத்தை புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். * ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தைக் குறைத்து, சோர்வை நீங்கி, புத்துயிர் அளிக்கவும் செய்யும். உங்கள் முகத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், இந்த மாஸ்க்கைப் போடுங்கள். ஆப்பிள் - 1, தண்ணீர் - 1 கப்